உறவு மெய்ப்பட

உன் மடியில் மழலையாய் தவழ்ந்தேன் என
என் கண்களில் கண்ணீராய் இன்று தவழ்கிறாயோ?
வளர்ப்பிறையாய் தான் இருந்தேன் அம்மா,
ஏனோ உன் வானத்தை தர மறுத்து எனக்கு தனிமையின் சிறை தந்தாய்?
நினைத்ததை எல்லாம் கிடைக்க பெற்றேன்
ஆனால் உன் அரவணைப்பு அது ஒன்றில்லாமல் தனியாய் கண்ணீர் துடைக்க கற்றேன் !!!
என் தோழி அவள் அன்னை கதை சொல்ல,
உன் ஞாபகம் அது என் நெஞ்சத்தின் சதை கிள்ள,
என் புன்"னகை" அதுப்போலி என்று யாரறிவாரோ?
கடவுளின் தரம் பார்க்க ஒரு வரம் கேட்பேன்,
என்ன தவம் செய்தால் என் அன்னை உயிர்த்தெழுவால் என்றேன்,
உன்னைப் போலவே அவனும் மறித்து போனான் போல ,
என்னிடமிருந்து உன் கரத்தைப் பறித்து போனான் போல !
உன் கருவறையே கல்லறையாய் ஏற்பேன் அம்மா , நம் உறவு மெய்ப்படும் என்றால் !!!

எழுதியவர் : ப்ரீத்தா (29-Jul-13, 1:07 am)
சேர்த்தது : preetha
பார்வை : 98

மேலே