என் இதயத்தில்ருந்து ........................

அன்பே

உனக்காக மெனகிடும் அத்தனைக்கும்
காத்திருந்து சேகரித்து உன்னிடம் சேர்த்து
நீ பார்த்து புன்னகைகையில்
தொலைந்து போகும் என் அத்தனை வலிகளும்

உன்னிடம் தந்துவிட கூடாது
எந்நாளும் எந்நேரமும் என்றுதான்
என் போராட்டம் அந்த ஏமாற்றத்துடன்
உனக்கு தருகையில் என் உயிரிலும்
வலிக்கும் என்பதால் .............

எப்போதும் உன்னிடம் ரசிப்பது
உன் கண்களில் காதல் என்னும்
கவிதையை அங்குதான் வளர்கிறது
என் காதலுக்கான நம்பிக்கை .........

எழுதியவர் : ருத்ரன் (29-Jul-13, 12:43 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 58

மேலே