அவள்
என் இதயக்
கவிதைத் தொகுப்பில்
மிகச் சிறந்த படைப்பாய்
என்றும் அவள் பெயர் ..
மயிலிறகு எண்ணங்கள்
மனம் வருடுகின்றன
அவள் நினைவால் ..
காதல் மொட்டவிழக்
காத்திருக்கின்றன என் விழிகள்
கணந்தோறும் இமை மூடாமல் ..
பிரபஞ்ச நினைவுகளற்ற நிலையிலும்
என் உள்ளம் மட்டும்
அவள் நினைவை சுமந்தபடி
கள்ளியவள் காதலுக்காக...........