எப்போது நீ வருவாய்

தலை நிறைய
பூ சூடி

முகமெல்லாம்
மஞ்சள் பூசி

கை நிறைய
வளையல் போட்டு

கை சிவக்க
மருதாணி வைத்து

சின்னதாய் குங்குமம்
நெற்றியில் சின்ன கீறல்

கால் கொலுசு
கொஞ்சி பேச

பச்சை நிற மேலாடை
அங்கங்கே மாங்காய் கோலம்

கன்னம் சிவக்க
உன்னை நினைத்து

என் பேச்செல்லாம்
உன் பேர் சுமக்க

காதோரம்
லோலாக்கு

கழுத்தில் நீ கட்டும்
தாலி மட்டும்

நெஞ்சமெல்லாம்
உன் நினைவுடன்
வாழும்வரை

எனக்காக நீ இருக்க
உன் மடி மீது தலை சாய்க்க
என் உயிரை விட வேண்டும்

இப்படியெல்லாம்
என் விருப்பம்

என் கை பிடிக்க
எப்போது நீ வருவாய் என
காத்திருக்கும் உன்னவள் நான் .....

எழுதியவர் : விஜிமோகனவேல் (31-Jul-13, 6:08 pm)
பார்வை : 164

மேலே