புற்றுநோய் பாதிப்புகளை தடுக்க "வாக்கிங்'!!!

அமெரிக்க செய்திகள்:

புற்றுநோய் பாதிப்புகளை தடுக்க "வாக்கிங்'!!!

வாஷிங்டன் : "புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு நாளில் 30 நிமிடங்களுக்கு வாக்கிங்' செய்தால், மரணம் ஏற்படுவதை தடுக்க முடியும்' என, புதிய ஆய்வு தெரிவிக்கிறது. தினமும் நடைபயிற்சி மேற்கொள்வதால், இதய நோய் பாதிப்பு, நீரிழிவு நோய் மற்றும் அனைத்து வகையான புற்றுநோய் பாதிப்புகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன என தெரிகிறது. இதுகுறித்து வாஷிங்டன் பல்கலை பேராசிரியர் கத்லீன் வோலின் கூறியதாவது:

ஆய்வில் பங்கேற்ற பலர்,கடந்த 10 ஆண்டுகளாக தினமும் உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள். இவர்கள் அனைவருக்கும் புற்றுநோய் பாதிப்பு மிகவும் குறைவாக இருந்தது. தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவதால், அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் காணப்பட்டனர்.

தீவிர உடற்பயிற்சியால், பல்வேறு நோய் பாதிப்புகளில் இருந்து நமது உடலை பாதுகாக்க முடியும். புற்றுநோய்,இதய நோய்கள் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப் பட்டிருந்தாலும், உடனே மரணம் ஏற்படுவதை தடுக்க முடியும். அனைவரும் இதை கடைபிக்க வேண்டும். இவ்வாறு கத்லீன் கூறினார்.

நன்றி ; முகநூல் நண்பர்

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (31-Jul-13, 8:12 pm)
பார்வை : 94

மேலே