காதல் முளைக்கிறதே.
காதல் முளைக்கிறதே.
உன்னால் வாழ பிடிக்கிறதே.
ஆசை பிறக்கிறதே
இடையில் வார்த்தை தடுக்கிறதே.
எதையோ பேச வந்திருந்தும்,
இதயம் என்னை மறைக்கிறதே.
சொல்லு சொல்லு பிரிவே
தள்ளி நில்லு.. இதயத்தில்..
காலை விடியலிலே உன்
முத்தம் எழுப்பியதே.
வந்த கனவு என்று
இதழில் வெட்கம் முளைக்கிறதே.
கண்ணாடி முகமெல்லாம் - உன்
கண்கள் தேடி அலைகிறதே.
உன்னை நான் பார்க்கும் போது
இதழ்கள் ஏனோ குழைகிறதே.
உனை காண நேரமெல்லாம்
உயிரில் முட்கள் படுகிறதே.
மூவேளை வேலை என்ன
உன்னை நினைப்பது தான்
வேலை என்பேன்.
சாலை பூக்களிலும் உன்
வாசம் மெல்ல நுகறுகிறேன்.
தடுமாறும் போது உந்தன்
காதல் தாங்கி பிடிக்கிறதே.
உன்னை சேரும் நாளை எண்ணி
குடையும் மழையும்
காத்திருதே..
-கவிசதிஷ்