ஈயாதவரின் இறுதிப் பயணம்..!

பசியினில் சோகங்களால்
பட்டினிப் பாவங்களாய்
வசிக்கின்ற வறியவர்க்கு
புசிக்கின்ற ஊண் ஈந்து
ஏழையின் ஒரு பொழுதை
ஏற்றிட தயாரில்லாத
கூட்டத்தில் இறைவா என்னை
கூட்டு நீ சேர்த்தாய் ஏனோ?
என்னைப்போல் வேறாள் இல்லை
இறுமாப்பாய் கொக்கரித்து
உதவாத வீண் பேச்சழந்து
ஊருக்குள் பீய்த்திடுவார்
உதவிண்ணு வருபவரை
உலை வைத்து தீய்த்திடுவோர்
உள்ளவர் உள்ளவரை-சமுக
உயர்வெல்லாம் பொய் உரை
அரசியல் இலச்சினையில்
அதிசயம் நிகழ்ந்துவந்தது
ஊரினில் ஒன்று என்றால்
உயிர் மூச்சாய் பங்கெடுப்பார்
சமுகத்தின் பிரச்சினைகள்
சார்ந்தாய் ஏதுமென்றால்
வறுமையில் யாசகன் போல்
வாய் மூடி இவரிருப்பார்
பூட்டனின் உழைப்பில் வந்த
புகழ் இன்னும் மங்காததால்
வயல் வெளி கடையறைகள்
வாடகை போகத்திற்கு-பணம்
விளைந்தது படியிறுக்கும்
அயல் வழி ஓட்டைகளில்
ஆதாயம் ஏகத்திற்கும்-மனம்
அலைந்தது முதலெடுக்கும்
மனிதனாய் இறை படைத்த
மகத்துவம் உணராவாறு
மணி,மணி என்றலையும்
மனிதனை எண்ணுகையில்
புனிதனாய் வாழ்ந்த முன்னோர்
போதித்த எல்லாம் விணே
நல்லவாயன் தேட-முடிவில்
நாறவாயன் தின்றோளிப்பாண்
போடியாய் முதலாளியாய்
புகழ்ச்சியில் மின்னிடுவார்
போலியை நம்பி,தம்பி
மகிழ்ச்சிகள் பண்ணிடுவார்
இறுதியில் கூடடங்க-ஊரில்
இருப்பவர் ஒன்று கூடி
பூமியின் பிரியும் விடை
புறந்தள்ளி மண்ணிடுவார்.
ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.