சாமி தந்த வரம் தட்டி பறிக்கும் பூசாரி(அரசு பணியாளர்கள்)
அரசின் இலவச மின்விசிறி,கிரைண்டர்,மிக்சி, திட்டம் எந்த இடர் பாடும் இல்லாமல் பயனாளர்களுக்கு வழங்க முதல்வர் நினைத்தாலும், அதை நடை முறைபடுத்தும் அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் மெத்தன போக்கால் அரசுக்கு அவப்பெயர் உண்டாகிறது. திட்டங்கள் என்றாலே பெரும்பாலும் ஏழை மக்களின் நலனுக்காகதான் என்பதை யாரும், எவரும் மறுக்க முடியாது ஏனென்றால் பணக்காரர்களுக்கு பெரும்பாலும் அவர்களது தேவைகளை அவர்களே நிவர்த்தி செய்து கொள்வது தான். ஆனால் அரசின் திட்டங்களையே முழுமையாக நம்பி இருக்கும் ஏழை மக்களின் சம உரிமைகளை அதிகாரிகள் தட்டி பறிப்பதிலும், அலட்சியபடுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்,அவர்களுக்கு தெரியவில்லை போலும், மக்களால் மக்களுக்காக, மக்களே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின், மக்கள் நலபணியாளர்கள் குறிப்பாக மக்களுக்காக பணியாற்றும் ஊழியர்கள் தான் அவர்கள் என்பது.. "முதலமைச்சர்" பதவி என்பதற்கு ஒரு சின்ன உதாரணம் "அவர்களது நேரம் அவர்களிடமே கிடையாது " அவ்வளவு மிகப்பெரும் தொண்டை ஆற்றிக்கொண்டிருக்கும் அம்மா அவர்களின் கவனத்திற்கு எல்லா இடர்பாடுகளும் கொண்டு செல்வது என்பது மிக அரிதே..சாமானிய மனிதர்கள் பெரும்பாலும் தனது உரிமைகளையும், கடமைகளையும், எவ்வாறு நிலை நிறுத்தவேண்டும் என்பதை அறியாதவர்களாகவே உள்ளது தான்..30-06-2011 அன்று பயனாளர்கள் எங்கு வசித்தார்களோ அதே இடத்தில் உள்ள நியாய விலை அங்காடிக்கு சென்று தான் இலவச பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர், பல இடங்களில் இலவச பொருட்கள் கொடுத்தாகி விட்டது குறிப்பிட தக்கது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் எவ்வாறு அணுகி பெறுவது மற்றும் கடைசி நிமிட நேரத்தில் ஏழை மக்கள் அடையும் மன உளைச்சல் அவர்களுக்கே வெளிச்சம்.. பாவம் ஏழை மக்கள் குறிப்பாக இந்திய குடிமக்கள் ஆனால் நாடோடிகள் என்று உணர கூட பட்டறிவு இல்லாமல் வாடகை வீடுகளில் வசித்து அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கும் நம் ஏழை மக்கள் .... அரசின் இலவச பொருட்கள் பெறப் பட்டபிறகு அதற்கு சான்றாக குடும்ப அட்டையில் முத்திரை பதிக்கபடுவது வழக்கம், அவ்வாறு இருக்கையில் பயனாளர்களுக்கு சிரமமில்லாமல் அரசின் திட்டங்களை செயல்படுத்த முடியாமல் திணறுவதற்கு நிச்சயம் திறமையின்மையே காரணமாக இருக்கமுடியும்....