புரியவில்லையே ரோஜாவே.
முள் மேல் அமரும் ரோஜாவே
உனக்கு முள்ளின் திறன் தெரியுமா?
நீயோ மிருது வான பூ
எழில் மிகுந்த வண்ணம்
பட்டு போன்ற இதழ்கள்
நீ எவ்வாறு முள்ளின் மேல் இருக்கிறாய் ?
ஒரு சிறு அசைவு உன்னைக் காயப்படுத்துமே
ஒரு சிறு திருப்பம் உன்னைக் கிழித்து விடுமே
இருந்தும் நீ எவ்வாறு நோகாமல் இருகிறாய் ?
புரியவில்லையே மற்ற முரண்களைப் போல