வாழ்க்கை
பிறப்பின் வாசலில்
உன்னை வரவேற்க
பெருமிதத்துடன் உன் தந்தை,
எதிர்பார்ப்புடன் பந்துக்கள் ,
பிரார்த்தனையுடன்
உன் பிஞ்சு முகத்தை பார்த்து
ஆனந்தக் கண்ணீருடன் உன் தாய் ,
பாரங்கள் பல இருந்தும்
உன்னை எண்ணி சமாதனப்படுத்திக்கொண்டு ,
மனசெல்லாம் பூரிப்புடன்
உன் வளர்ச்சியை எண்ணி எண்ணி
களிப்புடன் நீ விரும்பியவற்றை
வலி யை மட்டுமே கூலியாகக் கொடுத்து ,
உன் விழியில் ஈரத்தை பார்க்கக் கூடாதென்றெண்ணும்
கடவுளுக்கு நிகரான
பெற்றவர்களை சிந்தித்து பார் ,
நீ விபரீத முடிவின் விளிம்பிலிருக்கும் பொழுது ,
காரணம் நீ பல கூறலாம்
வேலைப் பளு,
நண்பர்கள் பிரிவு,
காதல் முறிவு,
நீ சென்று விடுவாய் உலகை விட்டு
உன்னை மரண வாசலுக்கு அனுப்பிவிட்டு
நிர்க்கதியாகி நித்தம்
உன் நினைவுகளுடன்
நடைபிணமாய்
வாழப் போவது உன்னை பெற்றவர்கள் மட்டுமே !!