அமலா VS விமலா ஜோக்ஸ் 03
டாக்டர் : உங்க கணவர் உங்ககிட்ட பயங்கரமா நடிப்பார் போலிருக்கே?
அமலா : எப்டி சொல்றீங்க?
டாக்டர் : ஓபன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது இதயத்துல இருக்கற என் மனைவிக்கு காயம்படாம பண்ணுங்கன்னு சொன்னாரே!
************************
அமலா : என்னடி, நீ வேலைக்காரி சேலையைப் போய் கட்டியிருக்க?
விமலா : அப்பத்தான்டி என் புருசன் ஏறெடுத்தே என்னைப் பாக்குறாரு.
*********************
அமலா : பத்திரிக்க ஆசிரியருக்கு காதல் கடிதம் அனுப்பியது தப்பாப் போச்சு.
விமலா : ஏன் ?
அமலா : பத்திரிக்கையில பிரசுரம் பண்ணிட்டு, சன்மானம் அனுப்பிட்டார்.
***********************
அமலா : என் மாமியார் ரொம்ப ஸ்ட்ரிக்ட்.
விமலா : எப்படி?
அமலா : கரெக்டா அரை மணி நேரத்துக்கு மேல சண்டைய நீடிக்க மாட்டார்.
நன்றி ;தமிழ் களஞ்சியம்

