ஆறாத காயங்கள்..!!

ஆறிப்போனதாய்
எண்ணிய காயங்கள்
நமைச்சலினால்
உயிர்பெற்று
வலி
ஏற்படுத்துவதுபோல்...

மறக்கப்பட்டதாய்
நினைக்கப்படும்
மனக்காயங்கள்...
ஆங்காங்கு
எங்கோ நிகழும்
ஏதோ நிகழ்வுகள்
எதையோ நினைவூட்ட..
மற(த்த)ந்த உணர்வுகள்
உயிர்பெற்று
காய்ந்ததாய்
கருதப்பட்ட
மனக்காயங்களுக்கு
புத்துயிரளித்து
புதுப்பொலிவுடன்
புதியதோர் காயத்தையளித்து
மாயத்தை ஏற்படுத்தும்
நிகழ்காலம்.......!!

எழுதியவர் : காயத்ரி வைத்தியநாதன் (7-Aug-13, 4:48 pm)
பார்வை : 234

மேலே