காயத்ரி வைத்தியநாதன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : காயத்ரி வைத்தியநாதன் |
இடம் | : புது தில்லி |
பிறந்த தேதி | : 16-May-1973 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 20-Nov-2012 |
பார்த்தவர்கள் | : 106 |
புள்ளி | : 18 |
தனித்ததொரு பெருவெளியில் மௌனத்தின் பக்கங்களை மோனமாய் வாசிக்கிறேன். மொழியாய் சுவாசிக்கிறேன்
காயத்ரி : வணக்கம் விசு சார்...
விசு : என்னம்மா, கொஞ்சநாளா ஆளக்காணோமேனு பார்த்தேன் வந்துட்டியா..? மறந்திட்டியோ நினைச்சேன்.
காயத்ரி : அது எப்படி சார் உங்கள மறக்கமுடியும்..?!!
விசு : சொல்லும்மா இன்னிக்கு என்ன தீர்மானத்தோட வந்திருக்க..?
காயத்ரி : ஒரு தீர்மானத்தோடவும் வரல ஐயா..சும்மா ஒரு சந்தேகம் அவ்ளோதான்..
விசு : சின்னதா சந்தேகம்...? சந்தேகமே இப்படி வேற இருக்கா..முடிவோட வந்துட்ட கேளும்மா .
காயத்ரி : எழுத்தும் எழுத்தாளனும் இதப்பத்தி தான் சார்..
விசு : ஏதோ சிக்கல்ல சிக்கவைக்கிறமாதிரி தோனுதே..
காயத்ரி : சிக்கல் இல்லாததகூட சிக்கலாக்கி சிக்கல நீக்க எல்லாரையு
சுமையாகிப்போன கல்வியதனை
சுகமாய் சுவைத்துப் படித்திட...
வணிகமாயில்லாது வஞ்சனையின்றி
இலவசமாய் வழங்கியே...
நன்றும், தீதும் எடுத்துரைக்கும்
நடுநிலை விமர்சகர்கள் வலம் வர..
எதிர்கட்சியை எதிரியாகவென்னாது
நல்லதை எடுத்துரைக்கும் நண்பனாய்க்கொண்டே
ஆட்சியமைக்கும் அரசியல்வாதிகளை பெற்று...
லஞ்சமில்லா அரசமைத்து...
விலை நிலங்களாகிப்போன, விளை நிலங்களை மீட்டெடுத்து
பூமித்தாய் பூரிப்படைய இயற்கைமுறை விவசாயம் செய்தே...
கன்னியரை காமுகனாயின்றி
கருணையுடன் அணுகிடும் ஆடவர்களும்...
கூட்டுக்குடும்பத்தின் பெருமையுணர்ந்து
இன்பத்துடன் இல்லறம் நடத்திடும்
பெண்களும் வாழ்ந்திட...
நம் சந்ததிகள் சாதி,
சுமையாகிப்போன கல்வியதனை
சுகமாய் சுவைத்துப் படித்திட...
வணிகமாயில்லாது வஞ்சனையின்றி
இலவசமாய் வழங்கியே...
நன்றும், தீதும் எடுத்துரைக்கும்
நடுநிலை விமர்சகர்கள் வலம் வர..
எதிர்கட்சியை எதிரியாகவென்னாது
நல்லதை எடுத்துரைக்கும் நண்பனாய்க்கொண்டே
ஆட்சியமைக்கும் அரசியல்வாதிகளை பெற்று...
லஞ்சமில்லா அரசமைத்து...
விலை நிலங்களாகிப்போன, விளை நிலங்களை மீட்டெடுத்து
பூமித்தாய் பூரிப்படைய இயற்கைமுறை விவசாயம் செய்தே...
கன்னியரை காமுகனாயின்றி
கருணையுடன் அணுகிடும் ஆடவர்களும்...
கூட்டுக்குடும்பத்தின் பெருமையுணர்ந்து
இன்பத்துடன் இல்லறம் நடத்திடும்
பெண்களும் வாழ்ந்திட...
நம் சந்ததிகள் சாதி,
என்ன பொன்னாத்தா.. நான் வாரதக்கூட கண்டுக்காம போற..?
குரல் கேட்டுத் திரும்பிய பொன்னாத்தா எதிரே முனிம்மா நிற்பதைக்கண்டாள். கவனிக்கல முனிம்மா...ஏதோ விசனம்.
“என்னாச்சு இன்னிக்கு ரொம்ப கவலையா இருக்கறியே..?!”
உனக்கே தெரியும் எங்க மொதலாளியம்மாவ பத்தி, அவங்க எவ்ளோ அன்பா எங்கிட்ட இருப்பாங்கனு. எதாயிருந்தாலும் எங்கிட்ட சொல்லுவாங்க. நல்லது கெட்டது அவுக ஆஃபீசு விசயம் இப்படி யாரப்பார்க்கறாங்க...எப்ப வருவாங்க எல்லாம் சொல்வாங்க.
எனக்கும் அந்தவீட்டில வேலை செய்யறோம்ன்ற நினப்பே இல்லாம நம்ம வீடுமாதிரியே இருக்கும். அந்த உரிமையில சிலநேரம் எங்க போறீங்க எப்ப வருவீங்க.. நேரத்துக்கு வாங்கன்னு சொல்வேன். ம
தகப்பனாய்
நீ தலைகோதிவிட
குழந்தையாய் உன்மடிமீது
நானுறங்க ஆசை...
தாயாய்
உன் ருசியறிந்து
பசியாற்றி...
உன் கவலைதுறந்து
உறங்கவைக்க ஆசை...
தோழியாய்
உன் தோள்சாய்ந்து
தோல்வி தொலைக்க ஆசை...
சகோதரியாய்
உன்னிடம்
சண்டைபிடிக்க ஆசை...
மாணவியாய்
நின் பெயர்
தழைக்கச் செய்ய ஆசை...
காதலியாய்
காதல்மொழி கேட்டு
நின் காதலில்
கசிந்துருக ஆசை...
மந்திரியாய்
ஆலோசனை
வழங்கிட ஆசை...
மனைவியாய்
உன் மனம் நிறைத்து
நின்கரு சுமக்க ஆசை...
பக்தையாய்
நின் பாதமலர்களை
கண்ணீர்முத்துக்களால்
அலங்கரிக்க ஆசை...
நின் கரம்கோர்த்து
சிகரம் தொட ஆசை...
இறக்கும் வரை
நம் கரங்கள்
இணைந்திருக்
என் மனத்தோட்டத்தில்
அவனுக்காக விதைத்த
காதல் விதைகள்
விருட்சமாய் வளர்ந்திருக்க...
கனிகளைப் பரிமாறிடும்
வார்த்தைப் பாத்திரங்கள்
வறண்டு
வழியறியாத
என் தவிப்பை
விரும்பாதவனாய்..
மனத்தோட்டத்தில்
அவனுக்காய்
கனிந்திருக்கும்
காதல் கனிகளை
கண்கள் வழி சுகித்து
எனை
களிப்படைய செய்ய
என் மனதாளும் மன்னவன்
அவனுக்கே சாத்தியமாகிறது.. :)
என்ன பொன்னாத்தா.. நான் வாரதக்கூட கண்டுக்காம போற..?
குரல் கேட்டுத் திரும்பிய பொன்னாத்தா எதிரே முனிம்மா நிற்பதைக்கண்டாள். கவனிக்கல முனிம்மா...ஏதோ விசனம்.
“என்னாச்சு இன்னிக்கு ரொம்ப கவலையா இருக்கறியே..?!”
உனக்கே தெரியும் எங்க மொதலாளியம்மாவ பத்தி, அவங்க எவ்ளோ அன்பா எங்கிட்ட இருப்பாங்கனு. எதாயிருந்தாலும் எங்கிட்ட சொல்லுவாங்க. நல்லது கெட்டது அவுக ஆஃபீசு விசயம் இப்படி யாரப்பார்க்கறாங்க...எப்ப வருவாங்க எல்லாம் சொல்வாங்க.
எனக்கும் அந்தவீட்டில வேலை செய்யறோம்ன்ற நினப்பே இல்லாம நம்ம வீடுமாதிரியே இருக்கும். அந்த உரிமையில சிலநேரம் எங்க போறீங்க எப்ப வருவீங்க.. நேரத்துக்கு வாங்கன்னு சொல்வேன். ம
சுறுங்கிய தோலும்
இடுங்கிய கண்ணும்
நடுங்கும் கரங்களுடன்
வயோதிகத்திலும்
சோறுவடிக்கும் - இவள்
அன்று பெய்த பாசமழை
விழலுக்கு இறைத்த நீராய்
வீணாகிப்போனதோ இன்று..??!!
தாய்க்கும் தாரத்திற்குமான
இடைத்தேர்தலில்
வெற்றிகொண்ட தாரத்தின்பொருட்டு
தரணியில் இவளும்
தனித்து விடப்பட்டாளோ
மனிதம் தொலைத்தவர்களால் ..??
இன்றும்..
விரும்பியவனை எண்ணியே
வெந்து தணிகிறாளோ ..?!
தனிமையை விரும்பியேற்ற இவளும்
வீட்டிற்கு வந்தவள்
வீதியிள் விட்டாளென
விருது வழங்கினாளோ..??
வெந்ததைத் தின்றே
விதிநோக்கியிருக்கும் இவள்
வீதியோரத்தை வீடாக்கிக்கொண்டாளோ..?
விதியோ..?
சமூகத்தின் சதியோ..?
விதியையும், சதிய