விசுவும், நானும் - 2

காயத்ரி : வணக்கம் விசு சார்...

விசு : என்னம்மா, கொஞ்சநாளா ஆளக்காணோமேனு பார்த்தேன் வந்துட்டியா..? மறந்திட்டியோ நினைச்சேன்.

காயத்ரி : அது எப்படி சார் உங்கள மறக்கமுடியும்..?!!

விசு : சொல்லும்மா இன்னிக்கு என்ன தீர்மானத்தோட வந்திருக்க..?

காயத்ரி : ஒரு தீர்மானத்தோடவும் வரல ஐயா..சும்மா ஒரு சந்தேகம் அவ்ளோதான்..

விசு : சின்னதா சந்தேகம்...? சந்தேகமே இப்படி வேற இருக்கா..முடிவோட வந்துட்ட கேளும்மா .

காயத்ரி : எழுத்தும் எழுத்தாளனும் இதப்பத்தி தான் சார்..

விசு : ஏதோ சிக்கல்ல சிக்கவைக்கிறமாதிரி தோனுதே..

காயத்ரி : சிக்கல் இல்லாததகூட சிக்கலாக்கி சிக்கல நீக்க எல்லாரையும் சிக்கவைக்கிற உங்கள சிக்கல்ல சிக்க வைக்க முடியுமா.. ?

விசு : ஆரம்பமே சிக்கலாச்சே சொல்லுமா.

காயத்ரி: எழுத்தும், எழுத்தாளனும் ஒன்றுதானா..? எழுத்த வச்சி எழுத்தாளன எடைபோடமுடியுமா..? எழுத்தாளனின் பிரதிபலிப்புதான் எழுத்தா...??

விசு : சின்ன சந்தேகம்னு இத்தன எழுத்த எழுதியிருக்கியேம்மா

காயத்ரி : :)

விசு : எழுத்தாளனோட
எண்ணம் எழுத்தாவதும்
எழுத்தே எண்ணமாவதும்..
எண்ணத்திலிருப்பது அனைத்தும்
எழுத்தாகாமல் போவதும்..
எழுத்தில் வந்ததெல்லாம்
எழுத்தாளனோட எண்ணமா
இல்லாமல் போவதும் உண்டு..

காயத்ரி : இப்படி தெளிவா சொல்வீங்கன்னுதான் உங்கள கேட்டேன் மேல சொல்லுங்க சார்.

விசு :சந்தோசமா எழுதறவன் எல்லாம்
சந்தோசமா இருக்கான்னோ,
சோகமா எழுதறவன் எல்லாம்
சோகமா இருக்கான்னோ,
சமூக அக்கறையா எழுதறவன் எல்லாம்
சமூக ஆர்வலன்னோ
ஆன்மீகத்தை எதிர்ப்பவன் எல்லாம்
பகுத்தறிவாளன்னோ
பகுத்தறிவு பேசறவன் எல்லாம்
ஆன்மீகத்துக்கு எதிரானவன்னோ
பெண்ணீயம் பேசறவன்
பெண்களைப் போற்றுபவனோ
பெண்களுக்கு எதிரா எழுதுபவன்
பெண்களை வெறுப்பவனோ..
இரக்கம் சொட்ட சொட்ட எழுதுபவன்
மனிதாபிமானம் உடையவன்னோ
யதார்த்தத்த யதார்த்தமா எழுதறவன்
கல்மனசுக்காரன்னோ இல்ல..

சந்தோசமா எழுதறவன் சோகத்தை மறைத்தும்
சோகமா எழுதறவன் சந்தோசத்தை அனுபவித்தும்
சமூகம் பற்றி எழுதறவன் அதன்மீது
அக்கறையின்றியும்
ஆன்மீகத்தைப் பேசுபவன் நாத்திகனாகவும்
பகுத்தறிவு பேசறவன் பக்தியாளனாகவும்
பெண்ணீயம் பேசறவன்
பெண்களுக்கெதிரானவனாவும்..
இரக்கமா எழுதறவன் கொலைபாதகனாகவும்
யதார்தமா எழுதறவன் இரக்ககுணமுடையவனாவும்
இருந்ததில்லையா...?
இருக்கக்கூடாதா...
இருக்கமாட்டாங்களா..? என்னம்மா சொல்ற..??

காயத்ரி : சார்...நான் அப்படி சொல்லல...அப்படியும் நினைக்க வாய்ப்பு இருக்கே அதான் உங்ககிட்ட சந்தேகம் கேட்கறேன்..

விசு :குழப்பமா பேசறவங்க எல்லாம்
குழப்பவாதியோ
தெளிவா பேசறவங்க எல்லாம்
தெளிந்த சிந்தனையுடையவங்களாவோ
இருக்கனுமா என்ன..
குழப்பமா பேசி தெளிவா இருப்பதுமுண்டு
தெளிவா பேசி குழம்பினவங்களும் உண்டு..
குழப்பமும், தெளிவும்
கொடுக்கறவங்களவிட
எடுக்கறவங்ககிட்டதான் இருக்கு..
அப்படித்தான் எழுத்தும் எழுத்தாளனும்..
அவன் பொதுவாத்தான் கொடுக்கறான்
எடுக்கறவங்க
எடுக்கறத வச்சிதான்
கொடுக்கிறது கணிக்கப்படுது..
கொடுக்கறதுல
எடுக்கறது தப்பாயிருந்தா
கொடுக்கறதும் தப்பாயிடும்..
என்னமா புரிஞ்சுதா..உன் சந்தேகம் தீர்ந்துச்சா...

காயத்ரி : நீங்க இவ்வளவு தெளிவா குழப்பமா கொடுத்தாலும் குழம்பாம தெளிவா கொடுக்கும்போது குழம்பினமாதிரி இருந்தாலும் தெளிவா புரியுது சார்..

குழப்பித்தெளியவைக்க உங்களவிட்டா யாரு இருக்கா..ரொம்ப நன்றி சார்...என் சந்தேகத்தை தீர்த்துவச்சதுக்கு...:)

விசு : நல்லதும்மா..உன் குழப்பத்த தீர்த்ததுல எனக்கும் மகிழ்ச்சினு குழப்பமில்லாம தெளிவா சொல்லிக்கிறேன்..பிறகு சந்திப்போம்..

காயத்ரி : எண்ண ஓட்டம்.. எல்லாம் தெளிவா ஆச்சு..ஆனா இப்ப எழுத்துன்னா என்னன்னுதான் மறந்துட்டேன்.. தெளிஞ்சிடும்..:)

எழுதியவர் : காயத்ரி வைத்தியநாதன் (9-Feb-15, 2:44 pm)
பார்வை : 65

சிறந்த கட்டுரைகள்

மேலே