நம் தேசம் போற்றுவோம், வளர்ப்போம்
சுமையாகிப்போன கல்வியதனை
சுகமாய் சுவைத்துப் படித்திட...
வணிகமாயில்லாது வஞ்சனையின்றி
இலவசமாய் வழங்கியே...
நன்றும், தீதும் எடுத்துரைக்கும்
நடுநிலை விமர்சகர்கள் வலம் வர..
எதிர்கட்சியை எதிரியாகவென்னாது
நல்லதை எடுத்துரைக்கும் நண்பனாய்க்கொண்டே
ஆட்சியமைக்கும் அரசியல்வாதிகளை பெற்று...
லஞ்சமில்லா அரசமைத்து...
விலை நிலங்களாகிப்போன, விளை நிலங்களை மீட்டெடுத்து
பூமித்தாய் பூரிப்படைய இயற்கைமுறை விவசாயம் செய்தே...
கன்னியரை காமுகனாயின்றி
கருணையுடன் அணுகிடும் ஆடவர்களும்...
கூட்டுக்குடும்பத்தின் பெருமையுணர்ந்து
இன்பத்துடன் இல்லறம் நடத்திடும்
பெண்களும் வாழ்ந்திட...
நம் சந்ததிகள் சாதி, சமய பேதமின்றி சகோதரத்துவத்துடன்
வன்முறையில்லா வையகத்தில்
உலகிற்கு உதாரணமாய் வாழ்ந்து சரித்திரம் படைத்திட
நம் தேசம் போற்றுவோம், வளர்ப்போம்..!!