இளநீர்காய்கள் கவிதை

*
சின்ன இடம் கிடைத்தால்
நெடுஞ்சாலையோரமாய்
புதிய புதியதாய் கடைகள்
முளைத்து விடுகின்றன.
வேகமாய் வந்தும் போய்க்
கொண்டிருக்கும் பயணிகள்
வாகனங்களை நிறுத்தி
மறைவிடந் தேடிச்
சிறுநீர்க் கழிக்கப் போகிறார்கள்.
தாகம் தணி்த்திடுவதற்கு
என்ன கிடைக்குமென
நோட்டமிடுகிறார்கள்.
பலப் பயணிகளின்
பார்வையைக் கவர்கிறது
பெரிய சிறிய
இளநீர்க் காய்கள்.
கையில் இளநீர்
வாயில் உறிஞ்சிகுழல்
குடிப்பவர்கள்
பார்வையெல்லாம்
எங்கெங்கோ. அப்பொழுது
அருகில் வந்து நின்று
கை நீட்டுகிறாள்
அழுக்கு ஆடையணிந்த
அழகானச் சிறுமி….!!
*

எழுதியவர் : ந.க.துறைவன் (9-Feb-15, 9:42 am)
பார்வை : 59

மேலே