என் கனியே ……
என் கனியே
என் மொழியே
என் தோழியே
என் கண்மணியே
உன் பார்வை காந்தத்தில்
உன் வசமானேன் நானடி
உன் சிரிப்பு பேச்சினில்
உன் அடிமையானேன் நானடி
உன் நெற்றிப் பொட்டினில்
உன் தஞ்சமானேன் நானடி
உன் மூச்சு காற்றினில்
உன் சொந்தமானேன் நானடி
உன் இதயத் துடிப்பினில்
உன் காதல் பெற்று வாழ்கிறேன் நானடி
என் கனியே
என் மொழியே
என் தோழியே
என் கண்மணியே
சற்று முன்பு பார்த்தேன்
சட்டென்று விழுந்தேன்
சாதியுமில்லை சொந்தமுமில்லை
சந்தித்துக் கொள்ள இடமுமில்லை
சாயங்காலமும் ஆயிடுச்சு புள்ள
சத்தியமா கட்டிப்பேன் புள்ள - உன்ன
சாமிகிட்ட கேட்டேன் வரமா - இப்போதவது
சாமந்திப் பூ என் வசமாகுமா சொல்
என் கனியே
என் மொழியே
என் தோழியே
என் கண்மணியே ……!