பள்ளிப் பருவத்தில் வாழ்ந்த வீட்டிற்கு செல்லும் ஒரு வாய்ப்பு
![](https://eluthu.com/images/loading.gif)
தொடர் குடியிருப்பு..
முன்னிருந்த கலையை இழந்து,.
அதில் நாங்கள் வாழ்ந்த வீடு மட்டும்
என் சுவற்றுக் கிறுக்கல்களோடு
எங்கள் நினைவுகளையும் ஏந்திய படி.
இத்தனை வருடம் ஆகியும்
முதுமையடையாத தென்றல்..
அந்தச் சூழ்நிலைக்கான வாசனையை
அள்ளித் தெளித்து எனை
நலம் விசாரிப்பது போல்
ஒரு உணர்வு..
தாழிட்ட கதவைத்
தொட்டுத் திறந்த வேளையில்,
ஐந்து பேர் ஒன்றாக சேர்ந்து
படுக்க முடியாத அறை..
புகை மண்டிய சமையலறை
சிமெண்டை விடுவிக்க தயாராகிக்
கொண்டிருக்கும் மேற்கூரை..
இருந்தும் அவை நினைவுப் படுத்தியது
பர பரவென்று சமைத்துக்கொண்டிருக்கும்
என் தாயையும்.
எனை அழ வைப்பதையே
பொழுதுபோக்காக வைத்திருந்த
என் அண்ணணின் குறும்புத் தனத்தையும்
அழும் காரணம் தெரியாமல்
என்னோடு அழுது கொண்டிருந்த
என் தங்கையையும்
இதற்கிடையில்
கருப்பு வெள்ளை தொலைக்காட்சியில்
கலர் திரை போட்டு பார்த்த
கங்கா யமுனா சரஸ்வதி எனும்
வாழ்க்கைத் தொடரையும்.,
சட்டென்று மறைந்த அந்த காட்சிக்குப் பின்னர்
கேட்டது
கிரிக்கெட் பேட் வைக்கும் மூலையும்
ஸ்டம்பிற்காக சுவற்றில் வரைந்த கோடுகளும்
சட்டென்று உயிர்ப் பெற்ற நிலைக்கதவும்
ஏன் இத்துணை நாட்களாயிற்று.,
வாழ்க்கையா? வசதியா?
கண்ணத்தை தொட்ட கண்ணீரோடு
மௌனமே உருவாய் நான்..