ஆசைக்காதல்
உன்வீட்டின் படிக்கட்டாய் மாறிட ஆசைதான் பெண்ணே,
தினம்தினம் உன்பாதம் என்மீது பதியும் என்றால்,
உன் தோட்டத்து மலராகவும் மாறிட ஆசைதான் பெண்ணே,
உன் கூந்தலில் சூட இடம்கொடுப்பாய் என்றால்,
உன் இதழ் நிறம்தீட்டும் சாயமாகவும் மாறிட ஆசைதான் பெண்ணே,
உன் இதழ்தொடும் பாக்கியம் தினம் எனக்கு கிடைக்கும் என்றால்,
உன் கைவிரல் இணைத்து நடக்கவும் ஆசைதான் பெண்ணே,
அதில் உன் முத்தங்கள் நனைத்து கொடுப்பாய் என்றால்,
உன் வாழ்க்கைத்துணையாய் வந்திடவும் ஆசைதான் பெண்ணே,
உன் மனம் விரும்பும் காதலனாய் என்னை ஏற்றுக்கொண்டால்...

