இந்து மாணவர்களை மட்டும் புறக்கணித்தது ஏன்..? பொன்.ராதாகிருஷ்ணன்....! இதுவும் வாக்கு வங்கி அரசியல்தான்...!
மத்திய அரசு சார்பில் கிறிஸ்துவ, இஸ்லாமிய மாணவர்களுக்கு வழங்குவது போல் இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று நெல்லையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது பாஜக.
பாஜக இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்று கேட்டு கடந்த 4 ஆண்டுகளாக போராட்டத்தை நடத்தி வருகிறது. ஓட்டு அரசியலுக்குத் தான் இந்த கல்வி உதவித் தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. கல்வியில் பின் தங்கி இருக்கும் முஸ்லிம் மாணவர்களின் கல்வியை ஊக்கப்படுத்த கல்வி உதவித் தொகையை வழங்க பரிந்துரை செய்தது.
ஆனால் முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்குவதை விட்டுவிட்டு, சோனியாவின் ஆலோசனைப் படி கிறிஸ்துவர்கள், பிரதமர் மண் மோகன் சிங் ஆலோசனைப்படி சீக்கியர்கள் மற்றும் புத்த பார்சி மத மக்களும் இதில் சேர்க்கப்பட்டனர்.
அப்படியானால் இந்து மாணவர்களை மட்டும் ஏன் புறக்கணித்து உள்ளீர்கள்..? என்றார் பொன்.ராதாகிருஷ்ணன்.
மேலோட்டமாக பார்த்தல் ஆமாம்....ஏன் இந்து மாணவர்களை புறக்கணிக்க வேண்டும்...இவர் சொல்வது சரிதானே என்று தெரியும்..? இங்கே தான் இருக்கிறது பார்பனிய சூதும் அரசியலும்...!
இந்து மாணவர்கள் என்ன..? ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் அணைத்து வசதிகளும் வழங்க வேண்டும்...இருக்க இடம்.. பிழைக்க வேலை வாய்ப்பு...மின்சாரம், குடிதண்ணீர்.. என்ற அடிப்படை உரிமைகளை வழங்க வேண்டும்..
ஏனென்றால் இந்தியாவில் உள்ள இந்துக்களே ஆகப் பெரும்பான்மை மக்கள்..யார் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள்...? பார்ப்பனிய பனியா ஆட்சி தானே நடக்கிறது..? சுதந்திர இந்தியாவிற்குப் பிறகு...இன்றுவரை...!
பிறகு ஏன் இந்த அடிப்படை உரிமைகளை வழங்கவில்லை...கிரிக்கெட்டு...பாகிஸ்தான்....உள்நாட்டு கொள்கை.. வெளிநாட்டு கொள்கை...
தீவிரவாதம் பயங்கரவாதம்... இலங்கை நட்புநாடு...காவிரி, அணு உலை என்றெல்லாம் ஒன்றாக மட்டை அடித்துவிட்டு,
தற்போது மட்டும் அல்ல என்றைக்கு இவர்கள் பாஜக என்ற கட்சியை ஆரம்பித்தார்களோ அன்றிலிருந்து இன்றுவரை காங்கிரஸ்
கட்சியை மட்டும் ஏன் சொல்கிறார்கள் இவர்கள்...?
காங்கிரஸ் கட்சி ஓட்டு வங்கி அரசியல் நடத்துகிறது என்றால்...இவர்கள் இந்து மத ஓட்டு வங்கி அரசியல் நடத்துகிறார்கள்...
இவர்கள் இருவரையும் விரட்டி அடிக்காமல் பெரும்பான்மையான மக்களுக்கு சுதந்திரம் ஜனநாயகம் போன்றவைகளே இல்லாத போது கல்வி உதவித் தொகை எம்மாத்திரம்..? என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்...!
சங்கிலிக்கருப்பு