அவளே எல்லாம்!

அவளே சொல்லாம்
அவளே மொழியாம்
அவளே அன்பாம்
அவளே எல்லாம்.

அவள்தான் அம்மா.
அவள்தான் ஆரம்பம்.
அவளின் உயிராம்.
அவள் கொடை வாழ்வாம்.

அவள் தந்த உதிரம்
அவள் அதன் ஓட்டம்
அவள் வடித்த உடலாம்
அவள் அளித்த கடனாம்.

அவள் கொடுத்த உண்ணீர்.
அவள் நினைவுக் கண்ணீர்.
அவள் பாடிய தாலாட்டு
அவள் துதிப் பாராட்டு.

அவள் விரித்த மடிப்பு
அவள் கனவின் விரிப்பு.
அவள் அணைத்த பாசம்
அவள் வம்சம் வீசும்.

அவள் பதித்த முத்தம்
அவள் அடைந்த இன்பம்.
அவள் கொண்ட சித்தம்
அவள் அருள் செல்வம்.


கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (13-Aug-13, 1:03 pm)
பார்வை : 192

மேலே