தலைப்பு கீழே

இன்னும் இமையில்
மறையாமல் உன்முகம்;

என் இதயம் திருடி-
சத்தமின்றி
கொஞ்சம் சண்டையிட்டு
எப்படியோ என்னுள் வந்தாய்;

விழியை இரணமாக்கி
என் நினைவை சுமையாக்கி
எங்கோ சென்றுவிட்டாய்;

என் வார்த்தைககளின் வண்ணங்கள் நீ,
என்றும் வயதாகாத என்
இளமை எண்ணங்கள் நீ;

தொடும் தொலைவில் நீ
உன்னை தொட முடியாமல் நான்;

என் குறும்பின் எல்லையே
இனிய தொல்லையே!
உன்னை தீண்டாமல்
இனிக்காது என் பொழுது;

இதோ இன்னும் ஒரு இரவு
மீண்டும் எப்போது வருவாய்
'என் இரவுக் கனவே'

எழுதியவர் : priyan (13-Aug-13, 12:13 pm)
Tanglish : thalaippu keeze
பார்வை : 132

மேலே