சுதந்திரம் யார் விதைத்தார்..?
சுதந்திரம் கனிந்த கதை உனக்கு புரியுமா ?
சுழி போட்டு சுழற்றியது யாரு தெரியுமா ?
வெண்கொக்கு சரக்கு விக்க வந்து போனாங்கே
வௌவாலு கூட்டம் போல தொங்கி விட்டாங்க
விக்க வந்த மந்தை கூட்டம் வாங்கிபுட்டாங்க
விலையின்றி பிறந்த மண்ணை எடுத்துபுட்டாங்க
மன்னராக மாந்தையர்கள் ஆட்சி செய்தாங்க
மானியமாய் பொன்பணமாய் அள்ளி வச்சாங்க
குரங்காகி பொம்மலாட்டம் போட்ட சபையிலே
குதிரபோல குதித்து வந்தான் கட்டபொம்மந்தான்
ஆயிரத்து எழுநூற்றி அறுபது ஆண்டிலேயே
ஆரவார அரண்மனையில் பிறந்த பொம்முலு
ஆறஞ்சில் பாஞ்சாலகுறிச்சியை ஆண்டான்
ஆணைகண்டு அஞ்சாத அரசனாய் நின்றான்
ஆங்கிலேய ஜாக்சனுக்கு வரியை கட்டாமல்
ஆவேச வீரம் பூண்டு தன்மானம் காத்தவன்
அடங்காத வெள்ளயனை குலைத்து போட்டவன்
அந்த ஆணவ ஜாக்சனையே விரட்டி அடித்தவன்
அடுத்து வந்த வெள்ளைநரி திட்டம் வைத்தானே
அதில் எட்டப்பன் என்றவொரு கோழை சேர்ந்தானே
பிணைசெய்து அழைத்துவர மேஜர் சொன்னானே
பின்புறத்து சுருக்குவழி பொம்மு மறைந்தானே
பேனர்மேன் மேஜர் அவன் பெண்ணும்மானனே
பொன்னும்பணம் தலைகென்று கூவிசொன்னானே
பொம்முலவன் உருமாறி பலகாடு கடந்தானே
போய் மறைந்த காட்டையிவன் நோட்டமிட்டானே
அடிவருடி மானமில்லா தொண்டைமான் அவன்
அரசனாய் ஆண்டானாம் புதுகோட்டையை அன்று
அறம் கெட்டு கரம்பூட்டி அனுப்பி வைத்தானே
அந்த பேனர்மேன் வேங்கையினை நேரில் கண்டானே
ஆங்கிலேய வாய்பேச்சிலிவன் வேங்கையானானே
அக்னியை அணையென்று அவன் கூச்சலிட்டானே
ஆயிரத்து எழுநூற்று தொண்ணூற்று ஒன்பதிலே
புண்ணியசெய் கயத்தாறு புளியமர கிளையினிலே
புன்னகைக்க முத்தமிட்டு மரணத்தை கண்டானே
புல்லரித்து எமன்கூட மெய்மறந்து நின்றானே
விதைவைத்து சுழிவைத்தான் வீரபாண்டியனவன் விருட்சமாய் பின் வளர்ந்து விடுதலையாய் கிடைத்தடா
வீரமாய் பேசுகின்றார் விடுதலையாம் சுதந்திரமாம்
விதைத்தவன் தமிழனென்று யாருமே சொல்லவில்லை
தமிழ்பைய்யா அறிந்திடுவாய் தமிழனுக்கு வீரமென்றால்
தண்ணீரில் குமுழியாகும் தரைதட்டி கிடக்காது
தரணிக்கு நீ சொல்வாய் தமிழனென்று தலைநிமிர்ந்து..!
-------------------------------------------------------------------------
அடிமைதனத்தை எதிர்த்து முதல் குரல் கொடுத்த வீரபாண்டிய கட்டபொம்மனை சுதந்திர நாளில் நினைவு கூர்வோம்..! அவன் ஒரு தமிழனென்று பெருமை கொள்வோம்..!
------------------------------------------------------------------------
குமரி பையன்.

