உண்மையான நட்பு

பிடிவாதமாக என்னை
உயர்த்த நினைக்கும் தோழியே
சின்ன சின்ன பேச்சுக்கு
கோபப்படுகிறாய்..
என்னை சிகரத்தில் நிறுத்த
உதவி செய்கிறாய்
நாம் இரண்டு பேரும்
பேசிக் கொண்டால்
சிலரோ காதலர்கள்
என்கிறார்கள்
நாளைக்கு தெரிந்து விடும்
நாம் உண்மையான
நண்பர்கள் என்று.
எங்களை தவறாக புரிந்து
கொள்ளும் சமூகமே...
என்றைக்கும் எங்கள்
மனதில் நட்பு உள்ளது
என்று ஏன் உணர்வதில்லை..!!!

எழுதியவர் : காந்தன் - (15-Aug-13, 3:34 am)
Tanglish : unmaiyaana natpu
பார்வை : 457

மேலே