பாடசாலை !

அகர வரிசைகளை எழுத்து கூட்டி
அறிவை பெற்ற இடம் இது

என் மொழி தமிழ் எனக்கு சுவாசம்
மனப்பாடம் செய்த ஆத்துசூடி

அறியாத பருவம் ஓடி திரிந்த நேரம்
தமிழை உவமையோடு அறிய செய்தது

என் ஆசானின் அன்பு அரவணைத்து
உயிர் மெய் எழுத்தை உணர வைத்தது

நட்பை அறியாத பருவம் அது –இன்னும்
சண்டையும் , சமாதானமும் இருந்தது

என் அறிவு பசிக்கு ஆக்கமான பாடங்கள்
தாய் மொழியோடு கற்ற பெருமை எனக்கு

இந்த பாடசாலை ......................

எனக்கு அறிவை தந்தது – இன்னும்
என் ஏதிர் காலத்தை ஏற்படுத்தியது !


கவிஞன். இறையடிமை

எழுதியவர் : கவிஞன். இறையடிமை (15-Aug-13, 8:40 am)
சேர்த்தது : கவிஇறைநேசன்
பார்வை : 1989

மேலே