தொடரும்

----- தொடரும் ----

லத்தி தழும்புகள்
உடம்பெங்கும்
நெத்தியில் குண்டுகள்
அங்கிங்கும்

பெண்ணின் சேலையுருவிய
கதையுண்டு
மண்ணின் மானம் காத்திட
சிதையுண்டு

ஒரு அணியின் திரளாய்
வெடி அதிர்வின் குரலாய்
வெளியேற்றிவிட்டோம் வெள்ளையனை.....

விரட்டித்தான் பார்க்கிறோம்
விடுதில்லையே!
நூல்றாட்டை அழிந்தபின்னும்
நூற்றாண்டை கடந்தின்னும்
தேகம் தாண்ட மறுக்கிறது
தேசிய குணமாய் இருக்கிறது
எங்கள் அடிமைத்தனம்.......

இந்த மண்ணில் வாழும்
சொந்த குடிகள் யாவும்
உரிமைதனை அடையும் வரை
அடிமைத்தளை உடையும் வரை
இந்திய விடுதலை போராட்டம் தொடரும்....

---- தமிழ்தாசன்----

எழுதியவர் : தமிழ்தாசன் (15-Aug-13, 8:53 am)
Tanglish : thodarum
பார்வை : 106

மேலே