திருச்சிக்கு வாருங்கள் !திருச்சிக்கு வாருங்கள் !-2

திருச்சிக்கு வாருங்கள் !திருச்சிக்கு வாருங்கள் !
எல்லோரும் எங்கள் திருச்சிக்கு வாருங்கள் !
காவிரி ஆறு கடலென ஓடும் காட்சியைக்
காண நமக்கு கண் கூடி வேண்டும் !
கரை புரண்டு ஓடும் காவிரித் தாயைத்
தரிசனம் செய்ய வாரீர் !நம்ம திருச்சிக்கு !
நன்செயும் புன்செயும் விளைந்து
நெல்லும் பயிரும் நீரும் நிறைந்து
வேளாண் மக்கள் மகிழும் நம்ம திருச்சி !
ஆட்ட்று நீரில் துள்ளி விளையாடும்
மீன்களை ஆவலுடன் காண வாரீர் !
பாலும் தேனும் மிகுந்து மக்கள்
நெஞ்சம் நிறைந்திருக்கும் நம்ம திருச்சி !
நெடிய மரங்கள் நம்மை நின்று அழைக்கும் !
கல்லணையும் கால்வாயும் கலந்து
வெண்ணாறும் வெட்டாறும் கலந்து அளிக்கும்
கவின் மிகு காட்சியைக் கல்லணையில் காண
வாருங்கள் திருச்சிக்கு !திருச்சிக்கு வாருங்கள் !
மேலணையில் மூன்று நதிகள் சங்கமித்து
நாட்டிய மங்கையை நடனம் ஆடும்
முக்கொம்பு உருவான இடம் காண வாரீர் !
காவிரியைக் காப்பாற்ற பிறந்தவள் !அவள்
காத்தல் தொழிலை செய்யும் குலமகள்
என்றெல்லாம் சொல்லாமல் சொல்லும்
கொள்ளிடம் காண ஓடி வாரீர் !
அலை கடலென திரண்டு திருச்சியைக் காண
வெள்ளமென மக்களே ! நீங்கள் புறப்பட்டு
வாரீர் !உங்களை நம்ம திருச்சி அழைக்கிறது !
இயற்கை வளம் காண இன்றே புறப்பட்டு வாரீர் !
இயக்கியை சுவாசியுங்கள் ! இன்பத்தை நுகருங்கள்
திருச்சிக்கு வாருங்கள் 1ற்றிசிக்கு வாருங்கள் !

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (15-Aug-13, 9:25 am)
சேர்த்தது : sarabass
பார்வை : 84

மேலே