சுதந்திரத்தின் நினைவுகள்

காற்றைப் பிடிக்க முடியாது... சுதந்திரத்திற்கு போராடிய நம்

காந்தியடிகளை மறக்க முடியாது..!

நேற்று பார்த்த நண்பனை நினைக்காமல் இருக்க முடியாது...

நேருவின் சட்டையில் அணிந்திருக்கும் ரோஜாவை மறக்க முடியாது..!

சுழல் போல வீசும் காற்றை நிறுத்த முடியாது... நேதாஜி

சுபாஷ் சந்திரபோஸின் வேகத்தை மறக்க முடியாது..!

உதிக்கும் சூரியனை தொட முடியாது... இந்தியாவை விட்டுக்கொடுக்காமல்

உயிரை கொடுத்த முஸ்லீம் இயக்கத்தை மறக்க முடியாது..!

கொட்டித்தீர்க்கும் மழையை நிறுத்த முடியாது...

கொடிக்காத்த குமரனை யாராலும் மறக்க முடியாது..!

எழுதியவர் : mukthiyarbasha (15-Aug-13, 9:49 am)
பார்வை : 84

மேலே