காந்திய மகத்துவம்
காந்திய நெறி ஒரு சன்மார்க்க நெறி
மனிதனை மனிதன் ஆக்க கூடிய நெறி
காந்திய நெறி
முன்னேற வேண்டும் என்ற துடிப்பு
இருந்தால் காந்தியத்தை கடைபிடி
அமைதியை நாடினால் காந்தியத்தை நாடு
காந்தியத்தை கடைபிடித்தால்
இவ்வண்டமே உன்னை கடை பிடிக்கும்
காந்தியம் நெறி அல்ல
காந்தியம் ஒரு சித்தாந்தம்
காந்தியம் வழி மட்டும் அல்ல
காந்தியம் ஒரு சகாப்தம்
காந்தியத்தை பழகி பகைவனையும்
நண்பனாக்கி கொள்
வாழ்வை உன் வசம் ஆக்க நினைத்தால்
காந்தியத்தை கடைபிடி
நாவினால் பேசுவதாலோ
செவிகளால் கேட்பதின் மூலமோ
இல்லை படிபதின் மூலமோ
காந்தியத்தை பின்பற்ற முடியாது
காந்தியம் எனது சக்தி
அதை மனதால் உட்கொண்டு
செயலால் வெளிக்கொண்டு
நடை முறையில் அமல் கொண்டு
பிறர் நலனில் துணை கொண்டு
அவன் வாழ்வில் மாற்றம் கொண்டு
சமூகத்தில் முன்னேற்றம் கொண்டு
வருவது தான் காந்தியம்
அன்றைய காந்திய நோக்கம் சுதந்திரம்
இன்றைய காந்திய நோக்கம் அரசியல்
காந்தியம் இன்றைய அரசியல்வாதிகளின்
துருப்பு சீட்டு
அன்றோ சுதந்திரத்திற்கான புரட்சி வழி
அதனால் தான் என்னவோ
இன்றைய அண்ணாவின் மார்கமும் காந்தியமே
சுயநலத்தை கடந்து
பொது நலத்தை பாராட்டுவது காந்தியம்
இன்றைய அரசியலிலோ சுயநலமே
காந்தியம் ஆக உள்ளது
சுயநலத்தின் வடிவு உருவமே இன்றைய
இந்திய அரசியல்
நாடு முன்னேற, தேவை
தூய அரசியல்
அதற்கு தடை ஆக நிற்பது
லஞ்சம் ,ஊழல்
இன்று நம் நாட்டில்
இருபதும் இதுதான்
இந்த விஷத்தை முளையிலே கிள்ளி எறிந்திட வேண்டும்
இல்லையெனில் நாட்டையே அழித்து விடும்
இதை அறுக்க காந்தியமே சிறந்த கோள்
இதை செய்ய இளைஞர்களே
சிறந்த மக்கள்
இது தான் நேரம் முன்னே வா
அரசியலுக்கு
சாக்கடை என்று வருந்தாதே ,
சுத்தம் செய்யும்
துறவு கோள்,உன்னிடம் உள்ளது
என்பது மறந்து விடாதே
இன்று நீ பின் வாங்கினால்
அந்த சாக்கடை மேலும் வழிந்து
உன் வீட்டையும் நாளை சேர்த்து
நாறடித்து விடும்
என்பதை மறந்து விடாதே
நீ பயன்படுத்த போகும் துறவு கோளான
காந்தியமே ,
இன்று சாக்கடையாக இருப்பதனை
நாளைய நந்தவனமாக
மாற்றபோவது என்பதை
நினைவு கொள்
காந்தியம் மட்டுமே
மாற்றத்தை அளிக்க வல்லது
இந்த சக்திக்கு இணையாக
வேறு எது நிற்க வல்லது .
வந்தே மாதரம் ! ஜெய் ஹிந்த்!