நாளைய எதிர்காலம்....
ஒற்றை ஜன்னல்
அதன் மடியில் நான்...
மெல்ல வீசும் தென்றல்...
நாசியை துளைக்கும்
மல்லிகை மொட்டுக்களின் வாசனை...
வீதியில் காலாற
நடக்கும் பெரியவர்.....
குழந்தையுடன்
கொஞ்சி பேசி செல்லும் அன்னை....
மனைவியை திட்டி செல்லும் கணவன்....
முதியோர் இல்லம் பற்றி
கருத்துக் கேட்கும்
தாத்தா.....
வழி விடாமல் சென்று
வண்டிக்காரனிடம்
வாங்கி கட்டிக் கொள்ளும்
பாட்டி.....
பேரம் பேசும் வாடிக்கையாளரை
பதம் பார்க்கும்
பூக்காரி....
கல்வி திட்டம் குறித்து
அசை போட்டு செல்லும்
மாணவர்கள்....
திருமண வீட்டு
வாழை இலைகளை கவ்விச் செல்ல
ஆடுகள்...
எதிலும் சிந்தை ஒட்டவில்லை...
மனதில் புயல்...
காரணம் நாளைய எதிர்காலம்.....