மெழுகுப் பெண் (தாரகை)

!!!மெழுகுவர்த்தியின் தத்துவம்!!!

விதவைக்குத் திலகமிடுங்கள்
வெளிச்சமாகட்டும்
அவள் வாழ்வு!

என் தாலிக்கயிறை கருக்க
என் கண்ணீராலே
எனக்கு கால்கட்டா?

ஒற்றைக்கால் தவத்தால் பெற்ற நெற்றிக்கண்
காமுகர்களை அடையாளம் கண்டு
சுட்டெரிக்க!

சுடர்காதலன் காற்றோடு கொஞ்சுவது கண்டதும்
இறந்துகொண்டிருக்கிறாள் மெழுகுப் பெண்
இறந்தகால நினைவுகளில்!

தீபம் பேசுகிறது
காதில் விழாது -அது
கைம்பெண்ணின் மனக்குமுறலல்லவா?

இளம் விதவை
இரவில் உருகுகிறாள்
எரிந்து கொண்டிருக்கிறது அவள் ஆசைகள்!

எழுதியவர் : தாரகை (19-Aug-13, 9:13 am)
பார்வை : 591

மேலே