@@@அண்ணனுக்கு அன்பளிப்பு @@@

அண்ணன் என்ற சொல்லின்
மன்னன் என் எண்ணமெல்லாம்
ஆட்கொண்ட சகோதரன் இவன்
===கருவறையில் உருவாகவில்லை
உறவாக உணர்வில் ஒன்றாக
கருவாகிய உறவு எனக்காக
அரிதாய் கிடைத்த பொக்கிசமாய்
உடன் பிறப்பின் பாசத்தை
அவன் உணர்வில் கண்டேன்
உள்ளத்தின் மகிழ்ச்சி வலியை
===உணர்வில் கண்டேன்
ரத்தம் தந்த உறவில்லை ஊரார்க்கு
நித்தம் அவன் நினைவின்றி
நிமிடமில்லை இத்தங்கைக்கு
அவனிடமிருந்து வரும் பதில்
சிறுநிமிடம் தாமதமானாலும்
அனிச்சையாய் ஆயிரம் முறை
===தவிக்கும் என் மனம்
கைபேசியை கண்சிமிட்டாமல்
பார்த்திருப்பேன் அண்ணாவின்
அன்பு அழைப்புகள் வரும் தருணங்கள்
அண்ணனின் குரல் சிறுநிமிடம்
என் செவியில் கேட்டாலும்
அது ஒலித்துக்கொண்டே
===இருக்கும் பல மணி நேரம்
அன்பானவர்களுக்கு எங்கோ
வலியென்றால் இங்கு வலிக்கும்
என்பதை நகைத்தேன் அன்று
என் அண்ணன் தலைவலி
என்று துவண்டு சொன்ன
குரல் கேட்டு அன்று முழுதும்
===என் உள்ளம் கொண்ட
வலியை உணர்ந்த அன்று
சிறுவலியும் ரணமாகும்
முதன்முதலில் உணரவைத்தான்
தவமிருந்து முத்தாக
பெறவில்லை மணியை
வரமாய் பெற்ற தவத்தில்
==="தவமணி"யாய் அண்ணன்
சகோதரனில்லா குறை தீர்த்து
என் வாழ்வில் மகிழ்ச்சி தந்து
"அண்ணன்" அறிய வைத்தவன்
தாமதமேன் என சிறு அதட்டல்
ஊர் சுற்றியதை வீட்டில்
சொல்லாமலிருக்க ஒரு கொஞ்சல்
===அவனுக்கு வேண்டிய பொருள்
என்னிடமென்றால் சிறு கெஞ்சல்
அடித்து பிடித்து சண்டையிட்டு
பொய் கோவம் அழகாக காட்டிட
அத்துனையும் அனுபவமில்லை
அனுபவித்ததுண்டு என் அண்ணனின்
நினைவுகளில் நிஜமான ஓர் உணர்வு
===அன்பில்லாதவர் அன்புகாட்ட
மேல்நாடுகளில் உறவுக்களுக்காக
இத்தினம் நித்தம் அன்பு காட்டி
உறவை மதிக்கும் நம்நாட்டில்
மகிழ்ச்சி கொள்ள இத்தினம் என்றும்
மனதில் வாழும் அண்ணாவிற்காக
மகிழ்ச்சியில் ஓர் தங்கையின் அன்பளிப்பு ...
( சகோதரத்துவ நன்னாளில் சகோதர உறவுகளுக்கு தங்கையின் வாழ்த்துக்கள் )
...கவியாழினிசரண்யா...