பெற்றால்தான் பிள்ளையா
ஊருக்கு ஊர் ஏங்கும்
ஓராயிரம் தம்பதிகள்
பிள்ளைவரம் வேண்டியே
பித்தாய் அலையும் மனிதர்கள்..........
எத்திசை போயி தேடியும்
இவ்வரமோ கிடைக்கவில்லை
இறுதி திசை போகும்போது
கொள்ளிவைக்க ஆளில்லை .......
ரத்த உறவு ஒன்று வேண்டி
மொத்த சொத்தும் கரைந்துபோச்சு
பிள்ளை பாக்கியம் ஒன்று வேண்டி
பிறவி முழுதும் முடிந்து போச்சு ...........
பாலைவன நிலத்தில் கூட
புல்பூண்டு முளைக்குது
பாவம் இந்த பென்வயித்தில்
புழு பூச்சும் வளரல .........
ஊட்டி வளர்த்த உறவுப்பில்லை
ரத்தம் தேடி ஓடுது
வளர்த்த பாசம் மறந்துவிட்டு
உண்ட வாயாலே சபிக்குது .........
பிள்ளையில்லா குடும்பங்களின்
நிலையென்ன ஆவது
எதிர்கால வாழ்வை எண்ணி
ஏக்கத்தோடு கழிக்குது ..........
பெற்றால்தான் பிள்ளையில்லை
தத்தெடுக்க வாய்ப்பா இல்லை
அன்பைகாட்டும் பிள்ளையைதேடி
அநாதை இல்லம் இன்றே நாடு ..........
ஏக்கத்தோடு ஏங்குகின்ற
எத்தனையோ குழந்தை இருக்க
பிள்ளை ஏக்கம் உனக்கு ஏனோ
தொல்லை தரும் துன்பம் ஏனோ ........
உனக்கான பிள்ளையை
உரிமையோடு தேர்ந்தெடுத்து
ஏங்குகின்ற பிள்ளைக்கு
இன்பம் தர இன்றே முயலு ...........
தத்து எடுத்த சொந்தமது
வெட்டிவிட்டாலும் போகாது
உன்னை சுற்றி உறவு கொள்ளும்
உன்னுடனே அன்பு கொள்ளும் ...........
இருவர் பட்ட துன்பமது
இணைவதாலே இன்பமாகும்
தத்து எடுக்கும் முறையினாலே
நீ தந்தை என்று நீ ஆவாய் ..........
உரிமையோடு கண்டிக்கின்ற
உரிமைவந்து உன்னை சேரும்
அன்போடு கொஞ்சுகின்ற
அதிகாரம் உனக்கு கிடைக்கும் ...........
பிறர்சொன்ன பழிசொற்கள்
பொய்யாக மாறிப்போகும்
உனஎதிர்கால வாழ்க்கைக்கு
துணையான வரம்சேரும்...........
பெற்றுவளர்த்த பிள்ளைகூட
பெற்றவர்களை வெறுத்து மறக்க
தத்து பிள்ளை நன்றிநினைக்கும்
காலமெல்லாம் துணை நிற்கும் .........
பெற்றால்தான் பிள்ளையில்லை
தத்தால்வரும் பிள்ளைகூட
உன் தலைகாப்பான் மகனாக
நீ தலைநிமிர்வாய் மனிதனாக ............