திருநங்கைகள்........................

அர்த்தநரீஷ்வரர் அவதாரமான எங்களை
அர்த்தமில்லாதவர்களாய் பார்க்கும் சமூகம்
நாங்கள் மாறிவிட்டதாக பார்க்கும் சமூகம்
அவர்கள் மாறமாட்டார்களா என்று பார்க்கும்
நாங்கள்.......................
உதிரம் துறந்து உருமாறிய எங்களை
உறவுகளும் மதிப்பதில்லை காலம் வரும்
என்று காத்திருந்து காலமாகி போன திருநங்கைகள்
அதிகம்............
வினோதம் நாங்கள் அல்ல சமூகமே
வினோதமான உங்கள் பார்வை
தான் ..............

எழுதியவர் : shivanitg (20-Aug-13, 12:33 pm)
Tanglish : thirunangaikal
பார்வை : 101

மேலே