பிள்ளையாரும் = சாமியாரும்
அன்று
அரச மரத்துக்கு
ஒரு பிள்ளயார்
அமர்த்திருந்தார்
இன்று...
அரச மரத்திற்கு
ஒரு சாமியார்
உட்காந்து விட்டனர் ...
காவி உடை போட்ட
கடவுளாக ...
அன்று
பிள்ளையாருக்கும்
தொப்பை ....
இன்று
சாமியார்களுக்கும்
இருக்கிறது
தொப்பை ....
அன்று
பிள்ளையார்
செய்தது
இலவச சேவை ...
இன்று
சாமியார்
செய்வது
வியாபாரம் ....
அந்த
பிள்ளயார்
பீடி பிடிக்கமாட்டார்
இந்த
சாமியார்
சாராயம் குடிப்பார்
பீடியும் பிடிப்பார் ...
அன்று -
பிள்ளயார்
சந்நியாசி
இன்று -
சாமியார்
சம்சாரி
இதைவிட பெரிய
வித்தியாசம்
பிள்ளை யாருக்கும் இல்லை
சாமியாருக்கும் இல்லை
ஆமாம்
நீங்க பிள்ளையாரின் ரசிகரா?
சாமியாரின் விசிரியா ?