தீவிரவாத பயங்கரவாத சட்டமும் அதன் உட்பிரிவு - 7 ம் பாய்ந்தது.....! யார் மீது...? ' தி கார்டியன் ' கட்டுரையாளர் மீது தான்...!

ஆக, அங்க சுத்தி...இங்க சுத்தி... கடைசியில் கழுத்திலேயே கத்தியை வைப்பது போல, தி கார்டியன் கட்டுரையாளர் டேவிட் மிராண்டாவை கைது செய்து ஹீத்ரு விமான நிலையத்தில் வைத்து ஒரு ஒன்பது மணி நேரம் சோதனை என்ற பெயரில் துளைத்து எடுத்துள்ளார்கள் பிரிட்டன் டெர்ரரிஸ்ட் ஆக்ட் மற்றும் அதன் ஷெட்யூல் 7 பிரிவின் கீழ்.....பணியாற்றும் அதிகாரிகள்....

டேவிட் மிராண்டா பிரேசில் நாட்டுக்காரர்....விசில் புளோயர் என்று அழைக்கப்படும் இவர்களின் அத்துணை பித்தலாட்டம்..... கேப்மாரித்தனம்...
என்று அணைத்து வித மோசடிகளையும் அம்பலப்படுத்தி வந்த சூப்பர் ஸ்டார் அசாங்கே....
முதல் மேன்னன் வரை சொல்லிய விசயங்களை அதாவது உலகிற்கு அமேரிக்காகாரனும் பிரிட்டன்காரனும் கூட்டாக சேர்ந்து செய்த பல மோசடிகளை வெளியிட்டார்கள் என்பது
அனைவருக்கும் தெரியும்.....

உளவு பார்ப்பது என்று தொடங்கி, அப்படியே உலக நாடுகளை உளவு பார்த்தது என்று நிற்காமல் சொந்த நாட்டு மக்களின் மொபைல் பிறகு கணினி வரை சென்று திரட்டிய கோடிக்கணக்கான தகவல்கள் வெளியே வந்தவுடன் பிரிட்டன் பத்திரிக்கைகள் மற்றும் அமெரிக்க பத்திரிகைகளில் தொடர் கட்டுரை எழுதி வந்தார் மிராண்டா அவர்கள்...

இதில் என்ன இருக்கிறது..? ஒரு நாடு என்று இருந்தால் உளவு பார்ப்பது சகஜம் தான் என்று காங்கிரஸ் கட்சி மற்றும் அரசு சொல்வதைப் போல எடுத்துக் கொள்ள முடியுமா..? பிரிட்டன் பத்திரிக்கைகாரனுக்கே இந்த நிலைமை என்றால் அங்குள்ள இஸ்லாமிய மக்களின் நிலை என்ன...?

ஏற்கனவே 2002 மார்ச் மாதத்தில் இருந்து பயங்கரவாதம் தீவிரவாதம் என்று உலக நாடுகளையெல்லாம் கூப்பிட்டு வைத்து, இப்படி சட்டம் போடு...அப்படி சட்டம் போடு என்று சொல்லி....ஏற்கனவே இருந்த மனித உரிமைகள்.. ஜனநாயக உரிமைகளை காலில் தூக்கிப் போட்டு மிதித்து கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில் தான்...தற்பொழுது கார்டியன் பத்திரிகை வரை வந்துள்ளது இந்த கொடும் ஆட்கொல்லி சட்டம்....

லேபர் எம்.பி.க்கள் மூன்று பேர் இந்த செயலுக்கு தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளார்கள்...
மேலும் இந்த சட்டத்தைப் பற்றி இங்கிலாந்து பாராளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்....

இந்த சம்பவத்தினால் கொதித்துப் போயுள்ள கெவின் மற்றும் கெலன் ஆகியோர் அமெரிக்காவின் எடுபிடியாக வேலை செய்து வரும் இங்கிலாந்து அரசை, அதன் இந்த ஆள்தூக்கி சட்டத்தை லேசில் விடுவதாக இல்லை என்று கூறிவிட்டார்கள்...இதில் இந்த கெவின் என்பவர் பிரிட்டன் நாட்டின் சுதந்திரமான புலனாய்வு ஊடகங்களின் தலைவராக உள்ளார்....

ஆக, இந்த தீவிரவாத பயங்கரவாத சட்டம்...தேசிய பாதுகாப்பு சட்டம்...கவுன்டர் தீவிரவாத சட்டம் இவையெல்லாம் மறு பரிசீலனைக்கு உட்படும் காலம் கனிந்து விட்டது என்று கருதலாம்....

ஈராக் நாட்டில் தீவிரவாதம் என்று சொல்லித்தான் மிகப் பெரும் பணக்கார நாடாக இருக்க வேண்டிய ஈராக் - ஐ கை கால்கள் உடைந்தவர்கள்...
விதைவைகள்... நோயாளிகள்...ஏனையவர்கள் குண்டு வெடித்து சாகும் அவல நிலைக்கு கொண்டு போய் விட்டுள்ளது அமெரிக்காவும் பிரிட்டனும்.....
அந்த ஈராக் நாட்டில் தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் என்று சொல்லி ஒரு 15 பேரை இன்று தூக்கில் போட்டு உள்ளது அங்குள்ள டம்மி அரசு....இந்த காலக் கொடுமையை எங்கே போய் சொல்வது...?

இவையெல்லாம் தீவிரவாதம் பயங்கரவாதம் என்ற உலகின் மக்களை தொடர்ந்து ஒரு பத்து வருடங்களாக அச்சுறுத்தியதின் விளைவுதான் என்று கூறலாம்...

இயல்பாக நமக்கு வரும் சந்தேகம் என்னவெனில் ஏன் உலகெங்கும் தீவிரவாதம் பயங்கரவாதம் என்று இன்னமும் கூவிக் கொண்டு இருக்கிறது கிட்டத்தட்ட உலகின் அணைத்து அரசுகளும்...?

எனக்குத் தெரியும் காரணம்...உங்களுக்கு...?

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (20-Aug-13, 5:17 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 68

சிறந்த கட்டுரைகள்

மேலே