நிலவிற்கு காதல் கடிதம்-
------------காதல் கடிதம்-----------
இரவு என்னும் courier இல் ..சூரியனால் ஒட்டப்பட்ட முத்திரை நீ ....
ஒ நிலவே....நிலவு அழகியே....
உன்னை நான் காதலிக்கிறேன் ....
எந்த நவீன பிரம்மாண்டங்களும்....உன்னை மிஞ்ச முடியாது ...உன் அழகை வெல்ல முடியாது.....
உன்னை வரவேற்க தான் ....சூரியன் வானத்தில் சிவப்பு கம்பளம் விரிக்கிறதோ.....
வெட்கப்பட்டு மேகத்திற்குள் ஒளிந்து கொள்ளாதே...
உன் பாதி முகத்தை பார்க்காமல் என் இரவு முழுமை அடையாது....
எல்லா ஒளிக்கதிர்களும் வெட்பத்தை தரும்போது..
உன் கதிரொளி மட்டும் குளிர்ச்சியாய் இருகின்றனவே ...
என்ன மாயம் செய்தாயோ ...
இந்த தறிகெட்ட மனித வாழ்வு பொய்த்து போய்விட்டது ...
alien-spacecraft போல உன் நிலவொளியால் என்னை உனக்குள்ளே இழுத்துக் கொள்வாயா...?