மறப்பேனா நினைவுகளே (குழந்தைப் பருவ நினைவுகள்)
மறப்பேனா நினைவுகளே
(குழந்தைப் பருவ நினைவுகள்)
நினைவுகளே நினைவுகளே
என் நெஞ்சில் விதைத்த
இளங்கதிரே என் இளமை
நினைவுகளே நினைக்கிறேன்
உங்களை நினைக்கிறேன்
என்னை மகிழ்விக்கும்
நினைவுகளே நான் எப்படி
மறப்பது உங்களையே
கல்லம் கபடமறியாப் பேதைப்
பருவம் தானே அது
தோழர் தோழிகள் சூழ
தோளைப்பிடித்து ஆடிய
ஆட்டத்தையும் அடிதடியையும்
மறப்பேனா மறப்பேனா
என் நினைவுகளே
நினைவுகளே
ஒற்றைக் காலில் ஓடி ஓடி
விழ விழ முக்கால் வண்டியில்
கால் வைத்து ஏறியதை
கண்டு தாய் தந்தை மகிழ்ந்ததை
மறப்பேனா மறப்பேனா
என் நினைவுகளே
நினைவுகளே
அம்மாவின் அதட்டலை மீறி
திருடித்திண்ற திண்பண்டங்களையும்
மண்னைத் திண்று வாங்கிய
பரிசையையும்
மறப்பேனா மறப்பேனா
என் நினைவுகளே
நினைவுகளே
ஓடும் மாட்டு வண்டியில்
ஏற முயன்று வீழ்ந்ததையும்
மறப்பேனா மறப்பேனா
என் நினைவுகளே
நினைவுகளே
நெருப்பில்லாமல் சமைத்து
உண்ற கூட்டாஞ்ச் சோறையும்
மறப்பேனா மறப்பேனா
ஒத்தையடிப் பாதையில்
இரு பக்கமும் மஞ்ச மஞ்சளாய்
பூத்த கிள்ளுப் பூவிடன்
காசு கேட்டதை
மறப்பேனா மறப்பேனா
என் நினைவுகளே
நினைவுகளே
திருவிழாக்களில் தாத்தாவின்
தோளில் பயனித்ததையும்
மாமனுடன் வயல் காட்டுப்
பயனத்தையும் மறப்பேனா
மறப்பேனா வயலில்
பறந்து திறிந்த பறவைகளை
ஓடிப் பிடிக்க முயன்ற
ஏமாற்றத்தையும்
மறப்பேனா மறப்பேனா
என் நினைவுகளே
நினைவுகளே
வயல் வரப்புகளில் குடியிருந்த
அலவனின் வளையில்
கைவிட்டு கடிப்பட்டதையும்
மறப்பேனா மறப்பேனா
அந்த அறியாப் பருவத்தின்
அம்மா அப்பா விளையாட்டின்
பொய் கல்யானத்தையும்
மறப்பேனா மறப்பேனா
என் நினைவுகளே
நினைவுகளே,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
என் நினைவுகளே உங்களை
நான் எப்படி மறப்பேன்
என் வசந்த வாழ்வின்
நிலவறைப் பொற்
களஞ்சியம் தானே நிங்கள்
மறப்பேனா உங்களை
என் நினைவுகளே
நினைவுகளே
மறப்பேனா மறப்பேனா
=== க.பிரபு தமிழன்