வாலி வாழி .

தோ லிலே வெளுத்தவர் .....தமிழிலே பழுத்தவர்
சொல்லிலே வல்லவர் .....சோர்விலா வித்தகர்
தமிழிலே தூளி கட்டி லாலி பாடும் வாலி அவர்

வானுயர புகழ் தான் கிடைத்த பின்னும்
வானுலகம் சென்று விட ஏன் நினைத் தாய் ?

காலனும் உன் கவியில் மதி மயங்கி
கவர்ந்து சென்றான் கள்வன் அவன்
ஆனாலும் வாலி
கவிதைகளில் காலமெலாம் வாழ்ந்திருப்பார்
தமிழ்ச் சொற்களில் தனி யிடம் பிடித்து தவமிருப்பார்
தமிழ் வாழும் காலம் வரை அவர் இருப்பார்

தமிழ் வாழி .....கவி வாழி ....வாலி வாழி .....

எழுதியவர் : ஏ.பி .சத்யா ஸ்வரூப் (22-Aug-13, 4:27 pm)
பார்வை : 74

மேலே