இறந்தாலும் உன் மடியில்
சாபம் கொண்ட என் வாழ்வில் ,
பாவம் போக்கும் தீபமாய் வந்தாய்
என் இருண்டு போன வாழ்வில்,
தாகம் எடுக்கும் வேலையும்
உணவு உள்ளே செல்ல மறுக்கும்
வேலையும் மருந்தாய்,
ஊரி வரும் நீராய் தாகம் தனித்து
பனி மலையாய் மனதை
குளிர வைத்தாய்
என்னைவிட்டு விலகி நடந்தாலும்
பிறரிடம் என்னை விட்டுகொடுக்க மறுக்கிறாய் ,
கடவுள் என்னை ஏன் படைத்தான்
என்ற என் கேள்விக்கு
விடையாக வந்தவள் நீ,
இயல்பு மாறிய என் பேச்சுக்கு
புது இலக்கணம் படைத்தாய் நீ,
என்னவென்று வர்ணிப்பது நான்
என் மீது அளவில்லா அன்பு செலுத்தும்
உன் மனதை,
பிறந்தபோது தாய் மடியிலே இருந்தேன்
இறக்கும் போது உன் மடியிலே பிறப்பேன்
உன் அன்பு என்னைவிட்டு
நீங்கி செல்லாமலிருக்க

