வருண பகவானே கருணை எங்கே?

வருண பகவனே
உன் ஆத்திரம் தீர்ந்ததா?
யாத்ரிகர்கள்
என்ன பிழை செய்தார்கள்?
கடவுளைத்
தரிசிக்க வந்தவர்களை
கடவுளடி சேர்த்துவிட்டாயே!
இது என்ன நியாயம்?
கேதார்நாத் புனிதம்
கேள்விக்குறி ஆகிவிட்டதே!
இந்தியாவின் புனித நதியே!
கங்காதேவி என்றும் மாதாவென்றும்
அன்னைஎன்றும் அழைத்தவர்களை ..
தினந்தோறும்
தீப ஆராதனை செய்தவர்களை..
ஆக்ரோஷத்துடன்
அடியோடு அடித்துச் செல்வதுதான்
அன்னையின் செயலா?
பத்ரிநாத்தில் கால் பதித்தால்
பாவம் போகும் என்பார்கள்!
பாவம்!
அவர்களே போய்விட்டார்களே!
இயற்கை வென்றதா?
ஆன்மிகம் வென்றதா?
சர்ச்சை வேண்டாம் ...
மொத்தத்தில்
மனிதம் வாழ வேண்டும்!
வருண பகவானே!
உன் கருணை எங்கே?

(ஆகஸ்ட் மாதம் "பாவையர் மலர்" இதழில்
பிரசுரமாகிய பரிசு பெற்ற கவிதை)

வெ. நாதமணி.
22/08/2013.

எழுதியவர் : வெ. நாதமணி (22-Aug-13, 10:02 pm)
பார்வை : 53

மேலே