உழவனும் தெய்வம்

ஒரு துளி சொட்டுகாக கால் கடுக்க,
உடல் வியர்வையும் மனம் போல் உலர்ந்து,
கரு மேகம் நோக்கி காலமெல்லாம்,
கண்ணயராமல் அவன் காத்திருந்தான்;

விண் நோக்கி வெடித்து நின்று,
பாழ் பட்ட விளை நிலங்களை போல,
வறட்சியுற்ற குரலதனில் குமுறி,
மனமுறுகி அவன் முடங்கி நின்றான்;

மறைந்தொளிந்த காதலியை
காலம் கடந்துபல, மீண்டும் கண்டதுபோல்,
தூரத்தில் கருமேகம் புடைசூழ கண்டு,
பரவச இன்பத்தில் மனமுறக் களிப்புற்றான்;

வானத்திலிருந்து இறங்கிய முத்து துளிகள்,
மேல் தெரித்து நிலமதை நனைக்க,
முதலிரவில் திளைத்த கணவன் போல்,
இன்பதில் அவனும் அமிழ்ந்தே நின்றான்.

ஊரிய நிலமதில் கால்களும் மூழ்க,
ஏரதை எடுத்து காளைகள் கட்டி,
தன் பசியை மறந்து, நம் பசியை போக்க,
பாட்டது எழுப்பி உழுதே மகிழ்ந்தான்;

களங்கமற்ற ஏழை மக்கள், எளிய உழவர்,
ஏனைய அனைவரை,
நன் முறையில் நாம் பேணிக்காப்போம்,
நாட்டின் வளர்ச்சியில் சிறிதே முனைவோம்!

சம்பத்

எழுதியவர் : சம்பத் கல்கத்தா (22-Aug-13, 9:55 pm)
சேர்த்தது : sampath kolkata
பார்வை : 46

மேலே