ஏழையின் சிரிப்பில் ....!!!

நோய் தீர்ந்ததும்
நேர்த்திக்கடனாய்
பாலாபிஷேகம் செய்ய
பத்து லிட்டர் பாலுடன்
பக்தியுடன் புறப்பட்டவன் ...

பாலம் தாண்டி மறுமுனையில்
ஆலயம் நோக்கி நடை போட்டான் ...!
செல்லும் வழியில்
சாலைப் பணியாளர்
வீதியே வீடாய்
குடும்பம் குடும்பமாய்
வசிக்கக் கண்டான் ....

பசியால் அழுத பிள்ளைகள்
ஒட்டிய வயிறுடன் பெண்டுகள் ...
பார்த்ததும் பரிதவித்தது உள்ளம் ...!!

அம்மன் சிலைக்கு அபிஷேகமா ...
அழும் பிள்ளைக்கு பாலா...?

கைவசமிருந்த பாலை
அங்கேயே கொடுத்து விட்டான் ....
பால்குடிக்கும் பிள்ளைகளின்
பசி போக்கியவன் ...
.ஏழையின் சிரிப்பில்
அம்மனைக் கண்டான் .....!!

வறியவர் பசிப்பிணி தீர்த்தால்
வந்த பிணி தீரும் .....!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (22-Aug-13, 10:37 pm)
பார்வை : 67

மேலே