பேச வேண்டும்

சந்திக்கும் போது நீயாக பேச்சை முதலில் துவங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை மட்டும் என்னால் மாற்றிக் கொள்ளவே முடியவில்லை
நான் முதலில் பேச வேண்டும் நீயும்,நீ முதலில் பேச வேண்டும் என நானும்..முடிவு வரை பேசாமலே கடத்தி விடுகிறோம்
எண்ணங்களின் இந்த ஒற்றுமையே பிரிவிற்கு வழியாகி விடுமோ என்ற பயம் மட்டும் மனதில் அப்படியே!
இன்றாவது பேசிவிட வேண்டும் என்று என்றோ துவங்கியது இன்றளவும் முடியவில்லை... உன்னிடம்!!
அதனாலேயே உன் மீதான எதிர்பார்ப்புகளை அதிகமாக்கி விடுகிறேன் !
தொல்லையாகி விடுவேனோ என்றே உன்னிடம் பேசாமல் தொலைத்தவை அதிகம்!
முடிவை எடுத்து விட்டேன்
நீ என்னை தொல்லை என நினைத்தாலும் பிரச்சனையில்லை தொலைக்க விரும்பவில்லை... உன்னை !