[482] நல்லதாம் ஓட்டம் ஓடு!
மெய்கூடி வந்த போது
பொய்கூடி வந்த வாழ்வு
நெய்கூட்டி உண்ட சோறு ,
நிழல்கூடி வந்த காற்று ,
கைகூடி வந்த தெல்லாம்
கடந்துமே சென்ற போது
மெய்மூடிக் கொண்டு போவார்!
மேலாடி நிற்கும் பொய்யே!
ஆதலினால்
சீவ ஒளி உன்னாவி யோடு கூடச்
சிறப்புகளும் பேறுகளும் உன்னைச் சேரத்
தேவவொளி வழிகாட்டத் திறமை யோடும்
தெளிவான சிந்தனையால் தடங்கல் நீங்க, ;
நாவுவழி வருகின்ற சொற்கள் எல்லாம்
நன்மைகளை நலங்களினைத் தந்து நிற்க ;
பாவவழி கடந்தவனாய்ப் பரமன் பாதம்
பற்றியவ னாய்நல்ல ஓட்டம் ஓடு!
**

