வெள்ளி பருவம்...!

பள்ளி பருவத்தை
வெள்ளி பருவமாக்கிய
நண்பனே..!

நீ தள்ளி இருந்த போது
கொள்ளி வைக்காமல்
எரிந்தேனடா நான்...!

விளையாட்டை
விளையாட்டாக
எடுத்து கொள்ள வேண்டும்
என்று
விளையாட்டாக
நீ சொன்னதை
விளையாடும்போதெல்லாம்
நினைப்பேனடா!!..
உன்னையும்...உன் நட்பையும்...!

உன் நட்பை விட
நான் நினைத்ததில்லை..
நீ நினைத்தாலும்
தடுப்பதாயில்லை...
ஏனென்றால்
உன் எண்ணம் தன
என் எண்ணம்...!

எழுதியவர் : போக்கிரி கவிஞன்*ராஜா* (5-May-10, 9:44 pm)
பார்வை : 6471

மேலே