விமர்சனம் செய்வது எப்படி-----கவிஜியின் எழுத்துக்கள வாசியுங்கள்...

அன்பான தோழமைகளே ....வணக்கம்...

ஒரு படைப்புக்கு விமர்சனம் செய்வது எப்படி என அறிய தோழர் கவிஜியின் இந்த விமர்சன வரிகளை வாசிக்கலாம்...

இது எனது கதைக்கானது என்பதால் இதை பதியவில்லை ...காயும் ஈரம் இப்போது ஒரு நாவல் உரு பெற்றுள்ளது....விரைவில் வெளிவர உள்ளது...பிற எனது இரு நூல்களோடு...

காயும் ஈரம் எனும் நாவலுக்கு கவிஜியின் இந்த விமர்சனம் நூலின் முற்பகுதியை அழகு செய்கிறது...

பிரபலங்களின் எழுத்துக்களை அச்சிடுவது என்பது அவர்கள் வளர்ந்தவர்கள் என்பதால் எனில்.....கவிஜி போன்றவர்களின் எழுத்துக்களை அச்சிடுவது இவர்கள் வளர்ந்துக் கொண்டிருப்பவர்கள் என்பதை உலகுக்கு அடையாளம் காட்டவும் ஊக்குவிக்கவும்
.தவிர வேறென்ன ?. எனவேதான் தோழர் அபியின் நூலுக்கு நமது தோழர் புலமியின் எழுத்துக்கள் நாவலின் முற்பகுதியை அலங்கரித்தன...

ஊரறிந்த கவிஜி உலகறியும் பொழுதுகள் வெகு அருகில் தான்...
-----------------------------------------------------------------
user photo
கவிஜி 29-Aug-2013 3:32 pm
காயாத ஈரத்தோடுதான் பயணிக்க முடிந்ததது காயும் ஈரத்துக்குள்....மன்னிகளை கொன்று விடுவோம்
..... கனகாக்களுக்கு மறு வாழ்வு கொடுப்போம். கொன்று விடுவதென்பது, வெறுமனே ...கொன்று விடுவதல்ல.....மறுவாழ்வு என்பது வெறுமனே வாழ்வதற்காக அல்ல.... இரண்டுக்குமான காரணங்களை ....நம் சமுதாயம் சுமந்து கிடக்கிறது....என்பதை காயும் ஈரம், ஈரம் குறையாமல் முன் வைப்பதை புரிவதற்கான நேரம் சற்று கூடுதலாய் இருப்பதே ஆசிரியரின் சிந்தனையின் வலிமை என்றே என் பார்வை பயணிக்கிறது.....

எல்லா ஊரிலும் , எல்லா நாட்டிலும் இருப்பது போல எல்லா ஜாதியிலும் ஒரு தாழ்ந்த ஜாதி.....
கண்டிப்பாக இது ஆசிரியரின் கற்பனை அல்ல....
இது சாபம்....
புல் பூண்டுக்கப்புறம் தோன்றிய மனிதனில், ஒரு சந்தர்ப்பவாதி தொடக்கி வைத்த சாபம்....
சாத்தானாய் தன்னை மாற்றிக் கொண்டு ஜம்மென்று வலம் வருவதாகத்தான் படுகிறது....

'எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்' வரிகளில் பயணிக்கும் வளைவுகள் நிறைந்த பயணமாகத்தான் சாமா- க்கள் இருக்கிறார்கள்....
பேச்சு, புரட்சி, நியாயம் , அநியாயம், அட போங்கடா...... வாழ்ந்து கிடக்க கிடைத்த வாழ்கையில் , திண்ணை பேச்சென்று, தீட்டென்று வீழ்த்து கிடப்பதற்கு நேரமில்லை என்பதாகவே சாமா--க்களை பற்றிய எனது புரிதல்கள் இருக்கிறதாக பக்கங்களை புரட்டுகிறது ஆசிரியரின் கண்ணீர் பட்ட விரல்கள்...

கண்ணீர் என்பது அழுகையின் குறியீடு அல்ல...
தோழர் தோழிகளே.... அது கோபத்தின் வெளிப்பாடாவும் இருக்கிறது....

உடல் சுகத்துக்காக அலையறா...என்பது கனகாக்களின் மீது மன்னிகள் தொடுக்கும் கடும் வார்த்தை பிரயோகம்....
சரி, யார்தான் அலையவில்லை....?
அது என்ன அவ்வளவு பெரிய குற்றமா?
வயிற்று பசி போலதானே... உடல் பசியும்....
அது இயற்கையின் பிடி...
தளர்த்திக் கொள்பவன் ஞானி ஆகிறான்... முடியாதவன் தாலி தேடுகிறான்.
இதில் கருத்து சொல்ல மன்னிகளே நீங்கள் யார்? என்று சாட்டை சுழற்றுகிறார், இறுதியில் என்ன செய்து விட முடியும் என்று சாமாவை கனகா கட்டிக் கொள்ளும் காட்சியில் ....

சிறு பிள்ளைகள் கிடைப்பார்களா என்று எப்போதும் கழுகாய் ஒரு கூட்டம், வயது வித்தியாசமின்றி காத்துக் கிடக்கிறது. அதற்கு உருவம் தந்து கோபால சாஸ்திரியாய் ' அலைய' விட்டிருக்கிறார் ....ஆசிரியர்.!!...
பணம் படைத்தவன் பத்தும் செய்யலாம், பத்தும் தப்பாக இருந்தாலும் ....
பணம் இல்லாதவன் ஒன்று கூட செய்ய முடியாது அது சரியாக இருந்தாலும்.....
இரண்டையும் கண்முன்னால் காட்டிக் கொடுத்த ஆசிரியர், சாட்சியின்றி கை கட்டி நிற்பதாகவே தோன்றுகிறது....

வானத்தை பொத்துக் கொண்டு புரட்சியாளர்கள் வந்து விட முடியாது... கனகா மாதிரியும், சாமா மாதிரியும் நம்மில் இருந்து தான் வர முடியும் என்பதை ஆசிரியர் சிந்திக்க தூண்டுகிறார்

....தங்கைக்காக வாழ்வை தொலைத்த அண்ணன்கள் வாழும் இதே சமுதாயத்தில்தான் கனகாக்களின் அண்ணன்களும் இருக்கிறார்கள்...
குட்டை பாவாடைகளும் கிறக்க செய்கிறார்கள்...
சிவனே என வேடிக்கை பார்க்கும் மனிதர்கள் சூழத்தான் விநாயகரும் வாழ வேண்டி இருக்கிறது....
கடவுளே..... மனிதனின் பிரதிபலிப்புதானே ....சொல்லாமல் சொல்லும் ஆசிரியர், மொழி நடையில் கொஞ்சம் சந்தேகத்தையே எழுப்பி விட்டார்....
இவர் அந்த பாஷை பேசுகிறவரோ என்று !

கேள்வி ஒன்று தான் .....ஆண், பிடித்தவளை திருமணம் செய்து கொள்ளும் போது பெண் தனக்கு பிடித்தவனை திருமணம் செய்து கொள்ள கூடாதா? கேள்வி ஒன்று தான்... அது ஆசிரியர் விதைத்தது. வாசகனின் மனதிற்குள் வளர்ந்து நிற்பதோ..... பல பதில்கள்...உடல் சுகம் ஆணுக்கு மட்டும் தான் இருக்குமா....பெண் என்ன கடவுளா.... எல்லாம் துறக்க...?

கற்பு மனம் சம்பந்தப்பட்டது ...கல்யாணம் என்பது, அதை செய்து கொள்பவர் சம்பந்தப்பட்டது ...இது புரியாத மூடர் கூட்டத்திற்கு சவுக்கடிதான் இந்த காயம் ஈரம்..சாஸ்திரம் பெருசுங்கறவன், ஏன்யா...உணர்ச்சியுள்ள பெண்ணை கட்டிக்கறீங்க ...ஏதாவது சாமிய கட்டிக்க வேண்டியது தான...இத்தனை மூர்க்கத்தையும் தேன் தடவி ஆம்பிடையானை பற்றிய விளக்கமாக்கியிருப்பதில் சூட்சுமம் புரிகிறது.. சூழ்நிலை எரிகிறது...காயும் ஈரம் காயாமல் இருக்க வேண்டும் படிப்பவர் மனதில்...அங்கே வேரூன்ற தொடங்கியிருக்கும், சாஸ்திர சம்பிரதாய மூட வழக்கத்துக்கும், பணம் மட்டுமே தேடும் முட்டாள்களின் பழக்கத்துக்கும் எதிரான புரட்சி ஒன்று....

அது சுய சிந்தனையில் இருந்தே தொடங்கும்...அது தான் உடனடி தேவையும் கூட....

----------------------------------------------------

குருஜி வாழ்க...!!!

எழுதியவர் : அகன் (29-Aug-13, 10:29 pm)
சேர்த்தது : agan
பார்வை : 529

மேலே