என் கிறுக்கி - 8

காதலை சொல்லி ஏற்ற பின்பு .. மறுநாள் இருவரும் பள்ளிக்கு வந்தனர் என்ன ஒரு வெட்கம் இருவர் முகத்திலும் ... ஒருவரை ஒருவர் பார்துக்கொண்டதோடு சரி... எதுவும் பேசிக்கொள்ளவில்லை தங்கள் காதல் இருக்கும் வெளிபட்டுவிடக்கூடாது என்று அவர்கள் தங்களுக்குள் போட்டுக்கொண்ட ஒப்பந்தமாகவே தெரிந்தது அது...!!!

இருவரும் காதலில் திளைக்க ஆரம்பித்தனர்...

என்ன செய்கிறோம் என்றே தெரியவில்லை இருவருக்கும்.. காரணம், காதல்.. அவர்களைப் பாடாய் படுத்தியது.. குழந்தைக் காதல் தானே ... இன்னும் வளர வளர சரியாகி விடும்...
பிடிக்காததெல்லாம் பிடிக்க ஆரம்பித்தது கிறுக்கனுக்கு... தண்ணீரும் தேனாக தித்தித்தது... காதலில் இதெல்லாம் சகஜம் தானே..

அந்தவருடத்தில் கிறுக்கியின் வீட்டில் புதுமனைபுகுவிழா... கிறுக்கி தனது தோழிகளையும் அழைத்திருந்தாள்... கிறுக்கனை மட்டும் அழைத்தால் சந்தேகம் வரும் என்பதால்.. கிறுக்கனும் தான் மட்டும் சென்றால் மாட்டிக்கொள்வோமோ..? என்று பீதியுடன் தனது நண்பர்களையும் அழைத்து சென்றிருந்தான்...
கிறுக்கி மஞ்சள் நிற பட்டு பாவாடை தாவணியில், தேவதையாக ஒருநிமிடம் கல்லைப் போலானான் கிறுக்கன்... வெள்ளை நிற உடை போட்டால் மட்டும் தான் தேவதை என்ற கூற்றை பொய்யாக்கினாள் மஞ்சள் நிறத்தில் மின்னிய கிறுக்கி...

நல்லபடியாக கிறுக்கி தனது தோழிகளையும் .. கிறுக்கனை சற்று தடுமாறியவாறே தனது தோழன் என்றும் அறிமுகப்படுத்தி தனது வீடு முழுவதையும் சுற்றிக்காட்டிக்கொண்டிருந்தாள்... கிறுக்கனும் மனதிற்குள் ஏதோ நினைத்தவனாய் கிறுக்கி பட்டென நமது கனவு இல்லமும் இது மாதிரி தான் இருக்கணும் என கிறுக்கனின் காதில் கிசுகிசுத்தாள்..புன்னகையாலே பதில் சொன்னான் கிறுக்கன்...

கிளம்பவா என கிறுக்கன் காலில் வெந்நீர் ஊற்றியவனாய் பறக்க கிருக்கியால் இரு என்று தோழிகளின் முன்னால் சொல்லமுடியாது தவித்தாள்... கண்ணாலே அவனை எரித்தாள்...
இந்த மரமண்ட கிருக்கனால் அதை புரிந்துகொள்ளவே முடியவில்லை.... மீண்டும் மீண்டும் பறந்தவனாய்.... போடா என்று எரிச்சலில் கிறுக்கி சொல்ல அதைக்கூட புரியாமல் ஓகே என்று புன்னகைத்தவாறே விடைப்பெற்றான் கிறுக்கன்... உதட்டில் மட்டும் புன்னகையுடன் கிறுக்கி ..

வாசலை தாண்டியபடி கிறுக்கன் இருக்க ... கிறுக்கியின் பெயரை சொல்லி ஒருவர் அழைக்க சொல்லு அண்ணா என்று கிறுக்கி சொல்ல .... வாட்டசாட்டமான தோற்றத்துடன் கிறுக்கியின் அண்ணன் ... நடுக்கத்துடன் கிறுக்கன்...


இன்னும் கிருக்காக்குவாள்....

எழுதியவர் : G .Udhay .. (29-Aug-13, 10:17 pm)
சேர்த்தது : க உதய்
பார்வை : 60

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே