திருமணநாள் வாழ்த்து ...!! என் பிரிய தோழிக்கு ...!

நட்பெனும் நந்தவனத்தில் பூத்த
குறிஞ்சி மலரே ...! - நின்னை
சகியாய் பெற்றதென் பாக்கியமே ....!!

உற்சாகமூட்டும் வார்த்தைகளால் -எனை
ஊக்குவித்த வாடா மலரே ..!
அள்ளக்குறையா அமுதசுரபியாய்
வற்றா ஊற்றாய் இன்பம் பெருகட்டும் ...!!

வேழமுகத்தான் திருவருளால்
வேண்டுவன எல்லாம் கைகூடி
நோயின் தாக்கம் சிறிதுமின்றி
நோக்கம் யாவும் நிறைவேறி

பண்பிற் சிறந்த பதியுடனே
பல்லாண்டு பல்லாண்டு
பெருவாழ்வு வாழி ....!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (29-Aug-13, 10:29 pm)
பார்வை : 788

மேலே