பரிசுப் பேழை

கொற்கை முத்துக்கள் எல்லாம்
கொள்ளை போய்விட்டனவா
அமைச்சரே !
ஆம் மன்னவா !
என்ன ?
பரிசுப் பேழையை வெறுத்த முத்துக்கள்
சில சித்திரப் பாவையர் இதழ் சேர்ந்தன
வேறு சில பொற்றாமரைக் குளத்தில்
சங்கப் பலகையில் கவி யாக்கும்
புலவர்களின் வார்த்தைகளில் சேர்ந்தன

அப்படியானால் அரசியின் பிறந்த நாளுக்கு
அன்புப் பரிசாக இந்த வெற்றுப் பேழையையா
கொடுப்பது ?
தேவை இல்லை மன்னவா !
சங்கப் புலவரின் கவிதை முத்தோலையை
வைத்துக் கொடுக்கலாம்

சரியான யோசனை அமைச்சரே !
யோசனைக்கு தங்களுக்கு ஒரு பரிசு தர வேண்டும்
வேண்டாம் மன்னவா
தங்கள் ஆணை முத்துக்களே நான் அன்றாடம்
அணியும் முத்து மாலை.

ம்....ம் துணைவியார் வரும்போது தந்த இதழ்
விருந்தோ பேச்செல்லாம் இலக்கியம்.

சரி புலவரை வரவழைக்கிறேன்.
சிறிது நேரத்தில் புலவர் வந்தார்

என்ன எழுதி வந்திருக்கிறீர் ஓலையில் கவிஞரே ?

கவிஞர் வாசித்தார்.

நல முத்துக்கள் நற் பாவையர் புன்னகையில்
சொல் முத்துக்கள் கவிஞர் எழுதும் ஓலையில்
கடல் முத்துக்கள் மன்னவன் மணி மகுடத்தில்
இன் முத்துக்கள் இலக்கியம் எழுதும் இதழினில் .

அருமை அற்புதம்.பரிசு கொண்டு வா

பரிசிற்குப் பரிசு அரசிடம் பெறுவது சரியல்ல.
இந்தப் பரிசிற்கு அரசியிடமிருந்து மன்னவன்தான்
பரிசு பெறவேண்டும்.

அதெப்படி ?
முத்த்துக்களைப் பரிசளித்து முத்தங்களைப்
பெறுவதில் பாண்டிய நாட்டு சாதாரண வீர்ரர்களே
சளைத்தவர்களில்லை எனும் போது
பாண்டிய மன்னவனுக்கு சொல்லித் தர
வேண்டுமா ? என்று சொல்லிவிட்டு
விரைந்தான் அந்த பொல்லாத கவிஞன்.

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (31-Aug-13, 12:03 am)
பார்வை : 130

சிறந்த நகைச்சுவைகள்

மேலே